ஸ்கந்தர் மூலமந்திரம்: ” ஓம் ஸ்ரூம் ஸ்கந்தாய நம: ”
சுப்பிரமணியர் மூலமந்திரம்: ” ஓம் ஸௌம் ஸுப்ரமணியாய நம: ”
குமாரர் மூலமந்திரம்: ” ஓம் க்ரூம் குமாராய நம: ”
குஹர் மூலமந்திரம்: ” ஓம் ஸூம் ஸ்வாமி குஹாய நம: ”
சரவணபவர் மூலமந்திரம்: ” ஓம் ஸ்ரீம் சம் சரவணபவாய நம: ”
ஷண்முகர் மூலமந்திரம்: ” ஓம் ஹ்ரீம் ஷம் ஷண்முகாய நம: ”
வள்ளிதேவி பீஜம்: ” ஓம் வ்ரீம் மகாவல்யை நம: ”
தேவசேனா பீஜம்: ” ஓம் ஹ்ரீம் தேவசேனாயை நம: ”
முருகன் மூல மந்திரம்:
ஓம் சௌம் சரவணபவ
ஸ்ரீம் க்ரீம் க்லீம் க்லௌம் சௌம் நமஹ.
சரவண பவ ஓம்
ஸ்கந்த காயத்ரீ மந்திரம்:
ஓம் கார்த்திகேயாய வித்மஹே
சக்திஹஸ்தாய தீமஹி
தந்நஸ்கந்த: ப்ரசோதயாத்.
அதி சூட்சும முருக மந்திரம்:
ஐயும் கிலியும் அடைவுடன் சௌவும்
உய்யொளி சௌவும் உயிரையுங் கிலியும்
கிலியும் சௌவும் கிளரொளியையும்
குண்டலி யாஞ்சிவ குகன்தினம் வருக
” ஓம் ஐம் ரீம் வேல் காக்க காக்க ”
இது பாம்பன் சுவாமிகள் அருளிய அதி அற்புதம் வாய்ந்த கவச மந்திரம்.
முருகனை வணங்கி கீழ்க்கண்ட சுலோகத்தை பாராயணம் செய்து வந்தால் பிரம்ம ஹத்தி தோஷம் நீங்கும். பிரம்ம ஹத்தி தோஷம் என்பது ஜாதகத்தில் உள்ள ஒரு கஷ்டமான அமைப்பாகும்.
ஸுப்ரஹ்மண்யஸ்ய மஹிமா
வர்ணிதும் கேந சக்யதே !
யத்ரோச் திஷ்டமபி பஷ்டம்
ச்விதரிணச் சோதயத்ய ஹோ !
ப்ரஹ்ம ஹத்யா தோஷ சேஷம்
ப்ராஹ்மணானாமயம் ஹரன் !
விரோதேது பரம்கார்யம்
இதிந்யாய மானயத்.
புத்தியும் நீ ! முருகோன் ஆறெழுத்தின் பொருளறியச்
சத்தியும் நீ ! சிவமாய் எங்குமாய் நின்ற சர்வமுகச்
சித்தியும் நீ ! அன்பர் பார்க்கின்ற ஞானத் தெளிவுதரு
முத்தியும் நீ ! அன்றி வேறில்லை வேதம் முடிந்திடமே !
— அகத்தியர்
விழிக்குத் துணைதிரு மென்மலர்ப்
பாதங்கள்; மெய்மைகுன்றா
மொழிக்குத் துணைமுரு காஎனும்
நாமங்கள்; முன்புசெய்த
பழிக்குத் துணைஅவன் பன்னிரு
தோளும்; பயந்ததனி
வழிக்குத் துணைவடி வேலும் செங்
கோடன் மயூரமுமே.
-கந்தரலங்காரம்