மாணவர்களில் சிலருக்கு மறதி அதிகமாக இருக்கும். எதைச் சொன்னாலும் அடுத்த நிமிடம் மறந்து விடும். பெரியவர்கள் கூட ஒரு காரியத்தைச் செய்ய மறந்து விட்டால், ‘ஆஹா மறந்து போய்விட்டது. நாளை செய்கிறேன்’ என்பார்கள்.
‘மறதி’ என்ற மூன்றெழுத்துக்குள்ளேயே ‘மதி’ என்ற இரண்டெழுத்து இருக்கின்றது.
‘மதி’ என்றால் சந்திரன் என்று பொருள்.
சந்திரன் ஒருவர் ஜாதகத்தில் பலம்பெற்றிருந்தால் தான் நினைவாற்றல் நன்றாக இருக்கும். நிகழ்காலத்தேவைகளைப் பூர்த்திசெய்து கொள்ளஇயலும். மேலும் ஜாதகத்தில் ‘ஞானகாரகன்’ கேதுவும், வித்யாகாரகன் புதனும் படிப்பு ஸ்தானத்தோடு சம்பந்தப்பட்டிருக்க வேண்டும். அப்பொழுது தான் கல்வியிலும் தேர்ச்சி பெற்றவராக விளங்க முடியும். மறதி இல்லாத மனிதராக வாழ்ந்து மகத்தான சாதனைகளைப் படைக்க முடியும்.
கல்வி வளம்பெற ஹயக்ரீவர் வழிபாடு உகந்தது. சரஸ்வதி படம் வைத்து விரதம் இருந்து சகலகலாவல்லி மாலையை இல்லத்து பூஜையறையில் காலை மாலை நேரம் பாடி வழிபாடு செய்யலாம்.