ஸ்வர்ணாகர்ஷண பைரவரை வழிபாடு செய்வதால் வறுமை, பகைவர்களின் தொல்லைகள், பயம் நீங்கும்.
அஷ்ட ஐஸ்வர்யங்களும், தன லாபமும், வியாபார முன்னேற்றம் பெறலாம். பணியாற்றும் இடத்தில் தொல்லைகள் நீங்கி மனத்தில் மகிழ்ச்சியை தரும்.
வாழ்க்கையில் பின்னடைவு, வராமல் காத்து செல்வச் செழிப்பை வழங்கும் ஸ்வர்ணாகர்ஷண பைரவரை வடக்கு திசை நோக்கி அமர்ந்து வழிபடுவது சிறப்பு.
மிகவும் உகந்த திருவாதிரை நட்சத்திரத்தில் வழிபடுவதால் சிவனது அருள், செல்வம் கிட்டும். தாமரை மலர் மாலையிட்டு, வில்வ இலை மாலை சாற்றி வழிபடுவது சிறந்தது. தேய்பிறை அஷ்டமி திதியும் உகந்தது.
ஸ்வர்ணாகர்ஷண பைரவர் யந்திரத்தினை, வீட்டிலோ,அல்லது வியாபார தலங்கள், சொந்த அலுவலகம் ஆகியவற்றில் வைத்து தினந்தோறும் தூப தீபம் காட்டி, அவருக்குரிய மந்திரங்களை தேவைப்படும் எண்ணிக்கையில் சொல்லி வணங்கி வந்தால் செல்வ செழிப்பு ஏற்படும்.
ஸ்வர்ணாகர்ஷண பைரவர் மூல மந்திரம்
ஓம் ஐம் ஹ்ரீம் ஸ்ரீம் ஐம் ஆபதுத்தாரணாய
ஹ்ராம் ஹ்ரீம் ஹ்ரூம் அஜாமளபந்ததாய லோகேஸ்வராய
ஸ்வர்ணாகர்ஷண பைரவாய,மம தாரித்ரிய வித்வேஷனாய
மஹா பைரவாய நமஹ,ஸ்ரீம் ஹ்ரீம் ஐம்!
ஸ்வரணார்கர்ஷ்ண பைரவர் காயத்ரி மந்திரம்
ஓம் பைரவாய வித்மஹே
ஹரிஹரப்ரம்ஹாத்மகாய தீமஹி:
தந்நோஹ் ஸ்வர்ணாகர்ஷணபைரவ ப்ரசோதயாத்!