லலிதாம்பிகை மந்திரம்
ஓம் லலிதாம்பிகாய் நமஹ.
பார்வதியின் அம்சமான ஸ்ரீ லலிதாம்பிகை தேவியை போற்றும் எளிய மந்திரம் இது. இந்த மந்திரத்தை தினமும் காலையில் குளித்து முடித்ததும் 108 முறை உரு ஜெபிப்பது நல்லது. வெள்ளிக்கிழமை மற்றும் அஷ்டமி திதிகளில் அருகில் இருக்கும் அம்பிகை கோவிலுக்கு சென்று, அம்மனுக்கு தீபமேற்றி இம்மந்திரத்தை 108 அல்லது 1008 உரு ஜெபிப்பதால் உங்களை பீடித்திருக்கும் தரித்திரம் படிப்படியாக நீங்கும்.
தொழில் மற்றும் வியாபாரங்களில் இருப்பவர்களுக்கு புதிய வாடிக்கையாளர்கள் கிடைத்து லாபங்கள் பெருகும். மறைமுக எதிரிகள் ஒழிவார்கள். செல்வ சேர்க்கை மற்றும் புகழ் உண்டாகும்.