தைப்பூசம்: இன்று சொல்ல வேண்டிய முருகன் ஸ்லோகம்
ஸிந்தூராருணகாந்திமிந்து வதனம் கேயூரஹாராதிமி:
திவ்யைராபரணைர் விபூஷிததனும் ஸ்வர்கஸ்ய ஸெளக்யப்ரதம்
அம்போஜா பய சக்தி குக்குடதரம் ரக்தாங்காதாம் சுகம்
ஸுப்ரஹ்மண்ய முபாஸ்மஹே ப்ரணமதாம் பீதிப்ரணாசோத்யதம்
– ஸ்ரீ சுப்ரமண்ய ஸ்லோகம்
பொருள்:
குங்குமம் போன்ற சிவந்த நிறம் கொண்டவரே, சந்திரன் போன்ற ஒளியுடன் கூடிய திருமுகத்தினரே, சுப்ரமண்ய ஸ்வாமியே, நமஸ்காரம். கேயூரம், ஹாரம் முதலிய திவ்யாபரணங்களால் பிரகாசிக்கும் அழகுத் திருமேனி கொண்டவரே, சொர்க்கத்திற்கே சுகமளிப்பவரே, தாமரை மலர், அபயம், சக்தி, சேவல் தாங்கும் நான்கு கரங்களைக் கொண்டவரே, சுப்ரமண்ய ஸ்வாமியே நமஸ்காரம். செஞ்சந்தனப் பூசி, செந்நிற ஆடையும் தரித்தவரே, தன்னை வணங்குபவரின் பயத்தைப் போக்குபவரே, சுப்ரமண்ய ஸ்வாமியே நமஸ்காரம்.