ஸ்ரீ சக்ர மகாமேருவை வழிபடுபவர்கள் பஞ்சகவ்யத்தால் அதை சுத்தமாக்கி நல்லலெண்ணெய் காப்பு சாற்றி, எலுமிச்சம் பழம், பால், தயிர், நெய், தேன், இளநீர், விபூதி, சந்தனம், கதம்பப் பொடி, பன்னீர், பஞ்சாமிர்தம் ஆகியவற்றால் அபிஷேகம் செய்து வழிபட வேண்டும்.
மகாமேருவை வழிபடுபவர்கள் பால், பாயாசம், அவல், கடலை, சுண்டல், உளுந்து வடை, கேசரி, வெண்பொங்கல், சர்க்கரைப் பொங்கல், இனிப்பு வகைகள், புளிசாதம், தயிர்சாதம் ஆகியவற்றை நைவேத்தியமாகப் படைக்கலாம்.
அஷ்ட ஐஸ்வர்யங்களை தந்திடும், மகாமேரு இருக்கும் இடத்தில் துர்தேவதைகள் அண்டாது, சுபிட்சம் உண்டாகும். தடைபட்ட காரியங்கள் நடைபெறும். காரிய வெற்றியை தந்திடக் கூடியது