இருவருமே தூது போனார்கள். தூது பலிக்காமல் மாபெரும் யுத்தம் நடந்தது.
இருவருமே விஸ்வரூபம் எடுத்தார்கள்.
இருவருமே மலையைத் தூக்கினார்கள். கோவர்த்தனம். சஞ்சீவி.
இருவருக்குமே வெண்ணெய் பிடிக்கும்.
இருவருமே பாரிஜாத மரத்தினடியில் இருப்பார்கள்.
‘ ச்யாயாம் பாரிஜாதஸ்ய ஹேம சிம்மாஸனோ பரி ‘ — ஸகஸ்ரநாமத்தில் வரும் வரிகள்.
ஹனுமன் பாரிஜாத மரத்தினடியில் ராமத்யானம் செய்து கொண்டிருப்பார்.
இருவருமே தானாக கட்டுண்டார்கள். கண்ணன் — யசோதைக்காக, உரலில் கட்டுண்டார். ஹனுமன் பிரம்மாஸ்திரத்துக்கு கட்டுப்பட்டார்.
பாரத யுத்தத்தில் அர்ஜுனனுக்கு சாரதியாக இருந்தார் கிருஷ்ணர். கொடியில் இருந்து ஜெயிக்க வைத்தார் ஹனுமன்.