சூரியன் இன்றி உலக இயக்கம் இல்லை.சூரியன் அருளும் ஒளியையும் பிராண சக்தியையும் கொண்டே தாவரங்கள் முதல் மனிதர்கள் உட்பட யாவரும் ஜீவித்திருக்கிறோம்.எனவே வேதம் அவரை ப்ரத்யக்ஷ பரமாத்மஹா என்று போற்றுகிறது.இதையே தமிழில் நம் பாரதியார் கண்ணுக்குத் தெரிந்த கடவுளே என்று சூரியதேவனைப் போற்றுவார்.இதன் காரணமாகவே நவக்கிரஹங்களில் ஒருவராகவும், நவக்கிரகங்களுக்குத் தலைவராகவும் போற்றப்படுகிறார்.ரசவாதத்தில் கூட இவரது அருளும், பங்கும் பிரதானமானது.பஞ்ச பூதங்களில் அக்னி அம்சமாகக் கருதப்படுபவர். சூரியன் வெப்பத்தை அளிக்கிறது.ஆனால், குளிர்ச்சியைத் தரும் சந்திரனும் கூட சூரியனிடம் இருந்தே அதற்கான சக்தியைப் பெற்றுச் செயல்படுகிறது.
வேதம்,உபநிஷதம் ,மந்திர,தந்திர சாஸ்திர நூல்களும் ஆதி தேவன் என்று அழைக்கப்படும் சூரியனைப் பற்றி மிக உயர்வாகவே பேசுகின்றன.இன்றும் பலர் வேத முறையிலும்,தாந்த்ரீக முறையிலும் சூர்யபகவானை உபாசனை செய்து வருகின்றனர்.
இங்கு நாம் பார்க்கவிருப்பது அக்னி சூர்ய மந்திரம் இம்மந்திர ஜெப பலத்தால் கர்ம வினையின் கெடுபலன்கள் வெகுவாகக் குறையும்.பித்ரு தோஷம் தீரும்.வேலையில்,அதிகாரிகளுடன் உள்ள பிரச்சனைகள் தீரும்.ஜாதகத்தில் சூரியன் பலமாக அமையப் பெறாதவர்கள் இம்மந்திர ஜபம் செய்து வர சூரியனின் அருள் பெற்று அவரது காரகத்துவ பலன்களைக் குறைவின்றிப் பெறலாம்.அதோடு வேலை,தொழில்,அரசாங்க காரியம் இவற்றில் உயர்வும் கிட்டும்.இதை குடும்பத்தில் உள்ள யாவரும் தனியாகவோ அல்லது சேர்ந்தோ செய்யலாம்.
அமாவாசை அன்று துவங்கிக் குறைந்தது 10 ஞாயிற்றுக்கிழமைகள் 108 எண்ணிக்கை ஜெபித்து வரலாம்.
அல்லது
ஒரே நாளில் (அமாவாசை அன்று) 1008 உரு ஜெபித்தும் முடிக்கலாம்.
ஞாயிற்றுக்கிழமை அன்று வரும் அமாவாசையில் செய்ய மிகச் சிறப்பான பலன்களைப் பெறலாம்.
சுத்தமான பசு நெய் ஊற்றி விளக்கு ஏற்றி வைத்துக் கொண்டு அதன் முன் கிழக்கு முகமாக அமர்ந்து, குருவையும்,குலதெய்வத்தையும் வணங்கிக் கீழ்க்கண்ட மந்திரத்தை ஜெபிக்கவும்.
ஸ்ரீ அக்னி சூர்ய மந்திரம் :-
ஓம் பூர் புவ ஸூவஹா |அக்னயே ஜாதவேத இஹாவஹா |
சர்வகர்மாணி சாதய சாதய ஸ்வாஹா ||