ஸ்ரீசக்கரத்தை விரதம் இருந்து வழிபடும் முறைகளை தெரிந்து கொண்டு கடைபிடிக்க வேண்டும். அதற்கான எளிய விரத வழிபாட்டு முறை வருமாறு-
முதலில் ஸ்ரீசக்கரத்தை ஒரு பீடத்தில் வைக்க வேண்டும். பின்னர் விளக்கேற்றி வைத்து விரத வழிபாட்டைத் தொடங்க வேண்டும், முதலில் கீழ்கண்ட தமிழில் உள்ள விநாயகர் துதியை சொல்ல வேண்டும்.
பின்னர் குரு வாழ்க, குருவே துணை, என்று குருவணக்கம் செய்ய வேண்டும்.
பின்னர் சுத்தமான நீரால் ஸ்ரீசக்கரத்திற்கு அபிஷேகம் செய்து, கற்பூர தீபம் காட்ட வேண்டும். தொடர்ந்து தேன், பால், தயிர் போன்றவற்றை ஒன்றன்பின் ஒன்றாக அபிஷேகம் செய்ய வேண்டும். ஒவ்வொரு அபிஷேகத்திற்கு இடையிலும் கற்பூர தீபம் காட்ட வேண்டும்.
அபிஷேகம் செய்யும் போது மந்திரங்களை அறியாதவர்கள் அபிராமி அந்தாதியையே, திருக்கடவூர் அபிராமி தோத்திரத்தையோ கூறலாம்.
பின்னர் சுத்தமான வெள்ளைத் துணியால் ஸ்ரீசக்கரத்தை ஒத்தி எடுக்க வேண்டும். அதன் பிறகு குங்குமத்தால் அர்ச்சனை செய்ய வேண்டும். அர்ச்சனை மந்திரங்கள் ஏற்கனவே 15-வது அத்தியாயதித்தில் உள்ளபடி கூறலாம். அதில் சிரமம் இருக்காது.
பின்னர் பயத்தம் பருப்பு பாயசம், வெற்றிலை பாக்கு, பழம் ஆகியவற்றைப் படைத்து, தூபம் காட்டி நிவேதம் செய்ய வேண்டும்.
நிறைவாகக் கற்பூர ஆரத்தி காட்ட வேண்டும். அப்போது நித்தியாதேவிகளின் காயத்ரி மந்திரங்களைச் சொல்லலாம். கற்பூர தீபம் மலையேறிய பிறகு பிரசாதத்தை விநியோகிக்கலாம்.
இவ்வாறு எளிய முறையிலும் ஸ்ரீசக்கர வழிபாடு செய்யலாம்.