மாங்காடு காமாட்சியம்மன் சக்கர வடிவமாகவே வழிபடப்படுகிறாள். ஒன்றரை மீட்டர் சதுர அளவுள்ள சக்கரத்தையே அங்கு காமாட்சியாக வழிபட்டுப் பலன் பெறுகிறார்கள்.
சக்கரத்தில் ஐக்கியமாகியுள்ள காமாட்சி பக்தர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி மகிழ்கிறாள்.
இந்த அம்மனுக்கு பதினெட்டு முழமுள்ள புடவை அணி விக்கிறார்கள். மேருவானது பல மூலிகைகளால் செய்யப்பட்டது என்பதால் அபிஷேகங்கள் கிடையாது. புனுகுச்சட்டம் மட்டும் சார்த்தப்படுகிறது.