அர்த்தமேரு என்றால் என்ன? அர்த்த என்றால் ‘பாதி’ என்று பொருள். மேரு என்றால் ‘மலை’, ‘பாதி மலை’ என்று பொருள். பாதி உயரம் உள்ள மேரு சக்கரம் என்றும் பொருள் கொள்ளலாம்.
அர்த்தமேரு 2 வகைப்படும். ஒன்று அகலம், நீளம் முழு அளவிலும், உயரம் மட்டும் பாதி அளவில் சக்தி கோணம், சிவகோணம் இரண்டும் ஒன்று சேர்ந்து அமைந்துள்ள உருவம் ‘ஸ்ரீஅர்த்த மேரு’ எனப்படும்.
மற்றொரு முறையில் அகலம், நீளம் முழு அளவில் வைத்து, உயரம் மட்டும் அரையளவு வைத்து பாதி உருவத்தை செய்து மீதமுள்ள 43 முக்கோணங்களைக் கோடாக வரைந்து செய்வதாகும். இந்த அர்த்தமேரு சக்கரம் சென்னை பாரி முனை ஸ்ரீகாளிகாம்பாள் ஆலயத்தில் உள்ளது.