🌿 _ஸ்ரீ ராம ராம ராமேதி_
_ரமே ராமே மனோ ரமே_
_சஹஸ்ர நாம தத்துல்யம்_
_ராம நாம வரானனே_
🌿இந்த ஸ்லோகத்தைப் படித்தால் விஷ்ணு சஹஸ்ரநாமத்தை முழுக்கப் படித்த பலன் உண்டு என்ற விஷயம் அனைவரும் அறிவோம்.
🌿இதை போல் சிவஸஹஸ்ரநாமத்திற்கும் ஒரு எளிய வழியுண்டு என்று நம்மில் எத்தனை பேர் அறிவோம்???
🌿சிவபெருமானால் உபதேசிக்கபட்ட இந்ந அதியத்புதமான எட்டு நாமக்களை சொல்வதால் 1008 திருநாமங்களை சொன்ன பலன் கிட்டும்
🌿அது என்ன எட்டு நாமக்கள்????
🌿ஷிவோ மகேஷ்வரச்சைவ ருத்ரோ விஷ்ணு பிதமஹா ஸம்ஸாரவைத்ய ஸர்வேஷ பரமாத்மா ஸதாசிவ ll
🌿பொருள்:
**********
🌿சிவ : அனைத்து வித மங்களங்களையும் அளிப்பவன்.
🌿மகேஷ்வர : முடிவில்லா மஹா அண்டத்தை உடையவன்.
🌿ருத்ர : ருத்ரன் (சிவபெருமானின் வடிவங்களிள் ஒன்று).
🌿விஷ்ணு : எங்கும் நிறைந்து இருப்பவர்.
🌿பிதமஹா : ப்ரஹம்மனின் வடிவாக இருப்பவரர்.
🌿ஸம்ஸாரவைத்ய : ஸம்ஸாரம் எனும் கொடிய நிலையிலிருந்து காப்பாற்றும் ஒரே வைத்தியர்.
🌿ஸர்வேஷ பரமாத்மா : அனைத்து கடவுள்களினுள் இருக்கும் பரம்த்மா.
🌿ஸதாசிவ : தென்னகச் சிவநெறியின் பரம்பொருளாகப் போற்றப்படுகின்ற சிவனின் வடிவம்.
🌿இந்த எட்டு திருநாமக்களை ஒருவன் மூன்று முறை சொல்வதால் சிவபெருமானின் 1008 திருநாமங்களை சொன்ன பலன் கிட்டும் என சிவபெருமானே சனகாதி முனிவர்களுக்கு சிவ மஹா புராணத்தில் உபதேசித்துள்ளார்.
🌿இன்றைய அவசர சூழ்நிலையில் 1008 நாமக்களை பாராயணம் செய்ய நேரம் இல்லாத சந்தர்பங்களில் இந்த எட்டு புனித நாமக்களை சொல்லி #சிவஸஹஸ்ரநாமம் பாராயணம் செய்த பலனை பெறுவோம்.
🌿இந்த நல்ல விஷயத்தை அனைவரும் பகிர்ந்து ஈசனருள் பெறுவோம்