இந்து மதத்தில் கடைபிடிக்கப்ப்டும் விரதங்களும், பூஜைகளும் மிகவும் சிறப்பு வாய்ந்தவை. அதிலும் சிவனுக்கு உகந்த விரதங்கள் மிகவும் சிறப்பு வாய்ந்தவை. பிரச்சனைகள் தீரவும், கோரிக்கைகள் நிறைவேறவும் சிவனுக்கு விரதம் இருந்து வழிபட்டால் வேண்டியவை நிறைவேறும். பிரதோஷ தினமான இன்று சிவபெருமானை விரதம் இருந்து வழிபாடு செய்தால் துன்பங்கள் படிப்படியாக குறையும்.
பாவம் போக்கும் இந்த விரதத்தை இன்று நாள் முழுவதும் உணவு அருந்தால் விரதம் இருந்து மாலையில் வீட்டில் சிவன்பெருமான் படத்தில் முன் நெய் தீபம் ஏற்றி வழிபாடு செய்ய வேண்டும். மேலும் சிவபெருமானுக்கு பிடித்த நைவேத்தியத்தை வைத்து பூஜை செய்து மாலை 6 மணிக்கு மேல் பிரசாதத்தை உண்டு விரதத்தை நிறைவு செய்ய வேண்டும்.
சிவபெருமானுக்கு உரிய விரதங்கள் எட்டு. அவையாவன:
* சோமவார விரதம் – திங்கட்கிழமை தோறும்
* திருவாதிரை விரதம் – மார்கழி திருவாதிரை
* மகாசிவராத்திரி – மாசி தேய்பிறை சதுர்த்தசி
* உமா மகேஸ்வர விரதம் – கார்த்திகை பவுர்ணமி
* கல்யாண விரதம் – பங்குனி உத்திரம்
* பாசுபத விரதம் – தைப்பூசம்
* அஷ்டமி விரதம் – வைகாசி பூர்வபட்ச அஷ்டமி
* கேதார விரதம் – தீபாவளி அமாவாசை.