அலுவலகத்தில் தொடர்ந்து தொல்லைகள், பதவி உயர்வு மறுப்பு, மதிப்பின்மை அல்லது பல நாட்கள் தேடியும் வேலையே கிடைக்காத தன்மை போன்றவை விலக கீழ்க்கண்ட பரிகாரம் மிகுந்த பலன் தரும். இந்த பரிகாரத்தை நம்பிக்கையுடன் செய்து வரலாம். இது போன்று பல பரிகார முறைகள் நம் முன்னோர்களால் உருவாக்கப்பட்டுள்ளது.
சனிக்கிழமையாக தேர்ந்தெடுத்து 1 கிலோ கருப்பு உளுந்து மற்றும் 1 கிலோ நிலக்கரி இரண்டையும் 1 மீட்டர் நீளம் மற்றும் அகலம் கொண்ட கருப்பு துணியில் நன்றாக முடிந்து வைத்து, அதை சாதகர் தலை மற்றும் உடலை 21 முறை வலது புறமாக சுற்றி (வேறு நபர் சுற்றலாம்) பின்பு அதை ஓடும் நீரில் (ஆறு, ஏரி, கடல், நீர் நிலைகள்) விட்டு விட வேண்டும்.
பின்பு அங்கேயே நின்று ராம பக்த ஆஞ்சநேயரை மனதார வேண்டி கொண்டு வீடு திரும்ப, விரைவில் நல்ல செய்தி வரும். இதை சனிக்கிழமை காலை 6-7 அல்லது 1-2 செய்ய மிகுந்த பலன் தரும். முடியாதவர்கள் வேறு நேரங்களில் செய்யலாம். மாலை 6 மணிக்கு முன்பு செய்து விட வேண்டும். மற்றபடி இதற்கு மந்திரம், திசை போன்றவை ஏதும் இல்லை. வீட்டிலேயே சுற்றி விட்டு பின்பு எடுத்து சென்று நீரில் விடலாம்.