ஸ்ரீமகாவிஷ்ணுவின் பல அவதாரங்களுள் தன்வந்தரியின் அவதாரமும் ஒன்று. ஸ்ரீமகாவிஷ்ணுவின் விருப்பப்படி கஸ்யபரின் புதல்வர்களான தேவர்களும் அசுரர்களும் ஒன்று சேர்ந்து அமிருதத்தை எடுப்பதற்காக பாற்டலைக் கடைந்தனர்.
அப்போது ஆலாஹலம் என்னும் விஷம் காமதேனு பசு, குதிரை, நான்கு தந்தமுள்ள வெள்ளை யானை, பாரிஜாதம் என்னும் வருஷம், அப்ஸரஸ் ஸ்த்ரீகள், ஸ்ரீமகாலட்சுமி முதலான பலவும் ஒன்றன்பின் ஒன்றாகத் தோன்றின. இறுதியாக கையில் அம்ருதம் நிரம்பிய கலசத்துடன் சங்கு சக்ரத்துடன் ஸ்ரீமகாவிஷ்ணுவின் அம்சமாக ஓர் மகாபுருஷன் தோன்றினார்.
அனைவரும் நமஸ்கரித்து அம்ருத கலசத்தைப் பெற்றுக் கொண்டனர். இவரே ஸ்ரீதன்வந்தரி. இவரே ஆயுர்வேத சாஸ்திர ஸ்தாபகர், ஆவார். அவரை வழிபட்டால், நல்ல உடல் நலத்துடன் கூடிய வாழ்க்கை அமையும். ஸ்ரீதன்வந்தரி பகவானின் படத்தை வைத்து, பூஜை செய்து அஷ்டோத்ரம் சொல்லி அர்ச்சனை செய்து வழிபட்டால் தீராத அனைத்து நோய்களும் உடனே விலகும். நமக்கு ஏற்படும் நோய்களைத் தீர்ப்பவர் மருத்துவர்தான் என்றாலும், தன்வந்தரியே மருத்துவர் வடிவில் வந்து நோயை குணப்படுத்துகிறார்.
ஆகவே நோயின்றி வாழ விரும்பும் குறிப்பாக மருத்துவத்துறையில் இருக்கும் அனைவரும் ஸ்ரீதன்வந்தரியை பூஜீத்து நமஸ்கரித்து நன்மையை அடையலாம்.