வியாபாரம் நடக்கும் இடங்களிலும், வீடுகளிலும் அமாவாசை தினத்தில் பகல் 12 மணிக்கு பூசணிக்காய், தேங்காய், எலுமிச்சையை பலிகொடுப்பது நமது வழக்கம். இவ்வாறு செய்வதால் வாணிபம் வளர்பிறையா வளரும், வீட்டில் மகிழ்ச்சி, செல்வம், கல்வி..எல்லாம் வளரும் என்பது நம்பிக்கை.
எவ்வாறு பலிகொடுக்க வேண்டும்?!
அமாவாசையன்று தேங்காய் உடைப்பவர்கள், அன்று காலையிலேயே தேங்காயை சுத்தம் செய்து, சாமி படத்தின்முன் வைத்து, ஒரு பாத்திரத்தில் நீரை ஊற்றி அதில் மஞ்சள் தூளை போட்டு கரைத்துக்கொள்ள வேண்டும்.மதியம் 12 மணிக்கு கடை, வீட்டு வாசலில் மஞ்சள் தண்ணீரால் தேங்காயை கழுவி. குடுமியில் கொஞ்சம் கற்பூரத்தினை வைத்து ஏற்றி, கடையை பார்த்ததுபோல் நின்று வலப்பக்கமாய் மூன்று சுற்று, இடப்பக்கமாய் மூன்று சுற்று சுற்றி வாசலில் உடைக்க வேண்டும்.. உடைபடும் தேங்காய் சில்லு சில்லாய் உடைபடுமாறு ஓங்கி அடிக்க வேண்டும். தேங்காய் சில்லுகளை உரிமையாளர்கள் தவிர மற்றவர்கள் எடுத்து சாப்பிடலாம். யாரும் எடுக்கவில்லையென்றால், எறும்பு, நாயாவது சாப்பிட்டு போகவேண்டும்.
வெள்ளை பூசணிக்காய்: பூசணிக்காயின் நடுவில் துளையிட்டு அந்த இடத்தில் மஞ்சள் குங்குமம், ஒன்பது ரூபாய்க்கான சில்லறைகளை போட்டு மஞ்சள் குங்குமம் பூசி, மஞ்சள் தண்ணீர் தெளிச்சு வாசலில் வைக்கவேண்டும். பூசணிக்காயை உடைக்க நபர் வலதுகையில் கறுப்பு கயிறு ஒன்றை கட்டிவரச் சொல்லி பூசணிக்காயை உடைக்க வேண்டும். பூசணிக்காய்க்கு திருஷ்டிகள் அனைத்தையும் ஈர்த்துக் கொள்ளும் ஆற்றல் உண்டு. அதனால், பூசணிக்காயை சுற்றுபவர் திருஷ்டிகளை அதனுள் ஈர்த்து போய் சிதறச் செய்கிறார். அவருக்கு எதுவும் நேராமல் இருக்கவே இந்த கருப்பு கயிறு. பூசணிக்காய் உடைப்பவருக்கு தட்சணை கொடுங்கள். சுற்றும் நபர் வெளி நபராக இருப்பின் முதலிலேயே தட்சணை கொடுத்துவிட வேண்டும். பூசணிக்காயை உடைத்துவிட்டு, மஞ்சள் நீரை தெளித்து கொண்டு அப்படியே சென்று விட வேண்டும் உங்களுக்கு தெரிந்தவராக இருந்தால் மஞ்சள் நீர் தெளித்துக் கொண்டு கைக்கால் கழுவிக் கொண்டு வீடு, கடைகளுக்குள் வரலாம். உடைத்த பூசணி துண்டுகளைல் வீட்டின், கடையின் நாலு மூலைகளில் வைக்கலாம். அல்லது வீட்டின் முன்பாகத்தின் இரு முனைகளில் வைக்கலாம்.எலுமிச்சம் பழம்: அமாவாசையன்று திருஷ்டி கழிக்க விரும்புவோர் கடையை திறந்ததும் கடவுளை கும்பிட்டு ஒரு எலுமிச்சம் பழத்தினை இரண்டாக வெட்டி அதில் குங்குமம் தடவி வருவோர் கண்பார்வை படும்படி வைக்கவும், கடை வாசலில் வைக்கவும். கடை மூடும் சமயம் அதை எடுத்து தலையைச் சுற்றி அதை இடம் வலமாக மாற்றி எறியுங்கள். இன்னொரு எலுமிச்சையினை மஞ்சள் குங்குமம் பூசி, கற்பூரம் வைத்து ஏற்றி, வீடு/கடையினை நோக்கி மூன்று சுற்றி வாசலில் உடைத்து இரு பாகமாய் கிழித்து வலக்கையில் இருப்பதை இடப்பக்கமும், வலக்கையில் இருக்கும் பாகத்தில் எலுமிச்சையை வலப்பாகத்திலும் வீச வேண்டும். இதை அமாவாசை தினத்தில் மட்டுமல்லாமல் செவ்வாய், வியாழன், ஞாயிற்றுக்கிழமைகலிலும் செய்யலாம். சக்திகளை திருஷ்டியின் பாதிப்புக்களை நெருங்கவிடாமல் செய்யும். இவ்வாறு வீடுகளுக்கு செய்யலாம்.
தேங்காய், எலுமிச்சை, பூசணிக்காய் என எந்த பலி கொடுத்து முடித்ததும் மஞ்சள் தண்ணீரை கொஞ்சம் தலை மற்றும் உடம்பில் தெளித்துக்கொண்டு சுத்தி போட்டவர், உள்ளே வந்ததும் தண்ணீர் குடிக்க கொடுக்கவும். இப்படி ஒவ்வொரு அமாவாசையும் செய்து வந்தால் கண் திருஷ்டி நீங்கும்.