திரிகளின் வகைகளும் அவை தரும் பலன்கள் பற்றியும் பார்க்கலாமா?
1.சுகங்களைக் கூட்டும் தன்மை கொண்டதுதான் பஞ்சுத்திரி.
2.முற்பிறவியின் பாவங்களை அகற்றி- செல்வத்தைத் தக்க வைத்துக் கொள்ள
வேண்டுமென்றால் தாமரைத் தண்டு திரி போட்டு விளக்கேற்ற வேண்டும்.
3.மழலைப் பேறில்லையே என ஏங்குவோர் வாழைத்தண்டு திரி போட்டு
விளக்கேற்ற வேண்டும்.
4.செய்வினைகள் நீங்கவும், நீடித்த ஆயுள் பெறவும் வெள்ளெருக்குப் பட்டைத்
திரியில் விளக்கேற்ற வேண்டும். முழுமுதற் கடவுளான
கணேசப்பெருமானுக்கும் உகந்தது இது.
5.தம்பதிகள் மனமொத்து வாழவும் – மகப்பேறு பெறவும் மஞ்சள் நிறங்கொண்ட
புதிய திரிபோட்டு விளக்கேற்ற வேண்டும்