நமது உடலில் உள்ள வாதம் பித்தம்,சிலேத்துமம் என்ற மூன்று நாடிகளில பித்த நாடி கூடினால் பல விதமான நோய்கள் உருவாகும்.
குறிப்பாக மஞ்சள் காமாலை நோய்.
பித்த நீரின் அதிக சுரப்பினால் இந்நோய் ஏற்படுகிறது.
இந் நோய் ஏற்படின், கல்லீரல், பித்தப்பை போன்றவை பாதிக்கப்படும்.
மேலும், கோபம், பொறாமை, சகிப்புத்தன்மையின்மை, வெப்பத்தை தாங்கமுடியாத தன்மை, கண் எரிச்சல், தோலில் வெடிப்பு ஏற்படுதல், அடிக்கடி சுளுக்கு ,வீக்கம் போன்றவை உண்டாதல்,வலியுடன் கூடிய மாதவிடாய், இள நரை, இள வயதிலேயே வயது முதிர்ந்த தோற்றம்,உயர் ரத்த அழுத்தம், மூட்டுவலிகள் (ருமடாய்ட் ஆர்த்ரைடிஸ்) நடக்கும் போது கடக் முடக் என மூட்டுகளில் சத்தம் வருதல், அல்சர்,போன்ற பலவித நோய் குறிகள் உண்டாகும்.
இது போன்று பித்த நீரின் அதிக சுரப்பினால் ஏற்பட்ட எத்தனை நாள்பட்ட நோய்களாக இருந்தாலும் அவற்றை நீக்க வல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள அதி உன்னதமான முத்திரை பயிற்சி .
கீழே படத்தில் உள்ளபடி👇👇 ஆள்காட்டிவிரல், நடுவிரலை மடக்கி உள்ளங்கையில் அழுத்தி வைக்கவும்.
கட்டை விரலை, மோதிர விரல், சுண்டுவிரல் நுனியோடு அழுத்திப் பிடிக்கவும்.
இம்முத்திரை செய்வதற்கான ஏற்ற நேரம் காலை அல்லது மாலை 6—10. தினமும் 15 நிமிடம் செய்யவும்.