வீட்டில் எவ்வளவு தான் பணம் வந்தாலும் தங்காது என்று புலம்புகிறவர்கள் தான் அதிகம். பணம் ஏராளம் வந்தும் அது தங்கவில்லையென்றால் வீட்டில் ஏதோ தவறு இருக்கிறது அல்லது நம் செயலில் ஏதோ தவறு இருக்கிறது என்பது தான் உண்மை. அப்படிப்பட்டவர்கள் இந்த பரிகாரங்கள் செய்தால் உங்கள் வீட்டில் செல்வத்தை தங்க வைக்க முடியும்.
காலையில் எழுந்ததும் வீட்டுக்கதவை திறக்கும் போது, மகாலஷ்மியே வருக என்று 3 முறை கூற வேண்டும். காலை 4.30 லிருந்து 6 மணிக்குள் வீட்டு வாசலில் சாணம் தளித்து, அரிசி மாவினால் கோலம் போட வேண்டும். இவ்வாறு செய்வதால் மகாலஷ்மியின் அருள் கிடைக்கும்.
பெண்கள் அதிகாலை நேரத்தில் படுக்கையை விட்டு எழ வேண்டும். அந்த நேரத்தில் தேவர்களும், பித்துருக்களும் வீடு தேடி வருவார்கள். அப்போது நாம் உறங்கக் கூடாது. காலையில் எழுந்தவுடன் யார் முகத்தையும் பார்க்காமல் வாய் கொப்பளித்து விட்டு, தண்ணீர் எடுத்து இரண்டு மடக்கு குடிக்க, லஷ்மி கடாட்சம் கிடைக்கும், கோபம் வராது.
சந்தோச ஒலி, பறவைகள் எழுப்பும் இனிய கீதங்கள், வீணை, மிருதங்கம் போன்ற வாத்தியங்களின் இனிய இசை நம் இல்லங்களில் நிறைந்திருந்தால் லஷ்மி கடாட்சம் பெருகும். முதலில் பெண்குழந்தை பிறந்தால் லஷ்மி கடாட்சம் பெருகும். பின் ஆண்குழந்தை பிறந்தால் நல்லது.
செவ்வாய், வெள்ளி ஆகிய இரண்டு நாட்களிலும் கொஞ்சம் மஞ்சள் எடுத்து ஒரு செம்பு தண்ணீரில் கரைத்து, அந்த கரைசலை வீட்டை சுற்றி தெளியுங்கள். மஞ்சளுக்கு துர்சக்திகளை விரட்டும் ஆற்றல் உண்டு. கண்திருஷடி நீக்கும், மஞ்சள் மகாலஷ்மியின் சொரூபம் என்பதால் செல்வத்தை அதிகமாக ஈர்க்கும்.
செவ்வாய், வெள்ளி கிழமைகளில் இரவு 8-9 மணிக்குள் மூன்று வெள்ளை சூடங்களை கையில் எடுத்து வீட்டில் உள்ளவர்களுக்கு திருஷ்ட்டி சுற்றி, வீட்டின் முற்றத்தில் வைத்து ஏற்றுங்கள். குடும்பத்தின் மீதும், குடும்ப உறுப்பினர் மீதும் உள்ள கண்திருஷ் விலகி விடும். இதை தொடர்ந்து செய்து வரும்பொழுது குடும்பத்தில் செல்வ பெருக்கு ஏற்படுவதை பார்க்கலாம்.
வீட்டு பூஜை அறையில் வெண்கல தட்டு ஓன்று வையுங்கள். அந்த தட்டில் ஒரு குபேரன் படம் அல்லது குபேரன் சிலையை வைத்து அந்த தட்டில் சில்லறை நாணயங்களை போட்டு வையுங்கள். வியாழக்கிழமை அன்று மாலை 4-5 வரை உள்ள நேரத்தை குபேர காலம் என்பார்கள்.
குபேர காலத்தில் தாமரை திரையில் நெய் விளக்கேற்றி குபேரனை வழிபடும் போது, தட்டில் உள்ள சில்லறை நாணயங்களை இரு கைகளாலும் அள்ளி, தட்டில் சத்தம் வருகிற மாதிரி மீண்டும் போட வேண்டும். ஏனென்றால் நாணய சத்த ஒலி குபேரனுக்கு பிடித்த ஒன்றாகும். இதை குளித்து சுத்தமாக செய்ய வேண்டும். இப்படி செய்தால் வீட்டில் செல்வம் நிலைத்து நிற்கும்.
செவ்வாய், வெள்ளிக்கு கிழமைகளில் 5 முகம் கொண்ட குத்து விளக்கு ஏற்றி திருமகளை வழிபட வேண்டும். வீட்டுக்கு வரும் சுமங்கலி பெண்களுக்கு குங்குமமும், தண்ணீரும் வழங்க வேண்டும். அவர்களுக்கு குங்குமம் கொடுக்கும் முன் தான் குங்குமம் இட்டுக் கொண்டு பிறகு அவர்களுக்கு கொடுக்க வேண்டும்.
அவர்களுக்கு மஞ்சள் கிழங்கு கொடுப்பதால் பல ஜென்மங்களில் செய்த பாவங்கள் விலகி பாக்கியங்களும், பொருளும், சந்தோசமும் பெருகும். நெற்றியில் எப்பொழுதும் குங்குமம் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். பால் பொங்கி வழியாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
மாலையில் இருட்டுவதற்கு முன்பதாக வீட்டில் விளக்கேற்ற வேண்டும். மாலையில் விளக்கேற்றியவுடன் வெளியே செல்லக் கூடாது. விளக்கு வைத்த பிறகு, தலைவாருதல், பேன் பார்த்தல், முகம் கழுவுதல் போன்றவை செய்யக்கூடாது.
விளக்கு வைத்த பிறகு குப்பைகூளங்களை வெளியே வீச கூடாது. பால், தயிர், பச்சைக்காய்கறிகள் ஆகியவற்றை இரவில் கடன் வாங்குதல், கடன் கொடுத்தல் கூடாது.
ஒவ்வொரு பெளர்ணமி அன்று மாலை குளித்து சத்ய நாராயணரை செண்பக மலர், துளசி இவைகளால் அர்சித்து கல்கண்டு, பால், பாயாசம் மற்றும் கனிவகைகளை வைத்து வணங்கிய பின்னரே இரவு உணவு உண்ண வேண்டும்.
வெள்ளிக் கிழமையன்று வீட்டிற்கு உப்பு வாங்குவது, அதிர்ஷ்டம் மற்றும் எல்லாவித செல்வங்களையும் கொடுக்கும். வெள்ளிக் கிழமைகளில் பணம் கடன் கொடுப்பது, அரிசி வறுப்பது ஆகியவை செய்யக் கூடாது.
செவ்வாய் கிழமைகளில் எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும். பெண்கள் சனிக்கிழமை தலைக்கு எண்ணெய் தேய்த்துக் குளிக்க கூடாது. தண்ணீரும், நெருப்பும் சிக்கனமாக உபயோகிப்பவர்களுக்கு எப்போதும் லஷ்மி கடாட்சம் உண்டு.
அன்றாடம் ஒரு பிடி அரிசியை ஒரு பெரிய பாத்திரத்தில் கடவுளுக்கு (அன்னதானம் செய்ய) என்று போட்டால் தான் லஷ்மி கடாட்சம் உண்டாகும். மட்டுமல்லாது லஷ்மி வீட்டில் வாசம் செய்வாள்.
தினம் தோறும் மாலை வேளைகளில் வீட்டில் விளக்கேற்றும் பொழுது, வீட்டின் தலை வாசல் இருபுறமும் மணல் அகல்விளக்கு ஏற்றி வையுங்கள். இது செல்வத்தை ஏற்கும் சக்தி வாய்ந்தது. இதை நம் முன்னோர்கள் காலங்காலமாக கடைப்பிடித்து வந்த நடைமுறையாகும்.