* நமக்கு வரும் வருமானத்தை எப்போதும் மனநிறைவுடன் ஏற்றுக்கொள்ளவேண்டும்.
* அடுத்தவர் பொருளாதாரத்தோடும், வருமானத்தோடும் நம் நிலையை ஒப்பிடக்கூடாது.
* நமக்கு வரும் வருமானத்திலோ, லாபத்திலோ குறைந்த அளவு, ஏழைகளுக்கோ,ஆன்மிக பணிகளுக்கோ செலவிட வேண்டும்.
* பணத்தைப் பிறரிடம் வழங்கும்போது தலைப் பகுதியியை நம் பக்கம் வைத்தபடி வழங்கவேண்டும்.
* ஈரம், ஈரத்தை ஈர்ப்பதுபோல் ஏற்கனவே இருக்கும் பணம்தான் புதிய பணத்தை ஈர்த்து வரும். எனவே பர்சில்… வங்கியில்…. பீரோவில் வறட்சி கூடாது.
* தூய்மையற்ற இடத்திற்குள் திருமகள் நுழைய மாட்டாள். வீடு… அலுவலகம்…கல்லாப்பெட்டிஞ்பணப்பை… எனச் செல்வம் புழங்கவேண்டிய இடங்களை எப்போதும் தூய்மையாக வைத்துப் பராமரிக்கவும்.
* வணிகத்தை… தொழிலை… அலுவலகப் பணியை மனமலர்ச்சியுடன் விளையாட்டகச் செய்யுங்கள். சிரிப்பவர்களைப் பார்த்தே மகாலட்சுமி வருவாள்.
* மனம் தரும் பணம்! போன்ற பொன்மொழிகளை உணர்ந்து முதலில் மனத்தைப் பணக்கார மனமாக மாற்றுங்கள். வெகுசீக்கிரம் வெளியில் பணக்காரன்ஆகிவிடுவீர்கள்.