⚛🌀🔯☘🌻🐚🌻☘🔯🌀⚛
*வீட்டின் முன் சாணம் தெளித்துக் கோலம் போடுவது ஏன்?*
❤🔆💙🔆🧡🔆💚🔆💜🔆♥
நாம கிராமப்புறங்களில் தினமும் காலையில் சாணம் தெளித்து கோலம் போடுவதைப் பார்த்திருப்போம்….
நவீன வளர்ச்சி என்ற பெயரில் தற்போது பலரின் வீட்டில் கோலம் கூட போடுவது கிடையாது.
🔷🔶🔹🔸✨❄✨🔸🔹🔶🔷
சாணம் தெளித்து கோலம் போடுவதற்கு பின்னால் இருக்கும் சிறப்புகள் என்ன, அமாவாசை தினத்தில் ஏன் கோலம் போடாக் கூடாது என கூறப்படுகிறது என்பதை விரிவாக பார்ப்போம்…
அனைத்து தெய்வங்களும் இணைந்த காமதேனு
🌳🌴🌷🌹🐄🐂🐄🌹🌷🌴🌳
ஈசனின் ஆணைக்கிணங்க அனைத்து தெய்வங்களும் காமதேனுவில் ஐக்கியம் ஆவது என முடிவு செய்தனர்…
அதன் படி ஒவ்வொரு தெய்வமும் காமதேனுவின் ஒவ்வொரு இடத்தில் அமர்ந்தது. லட்சுமி தேவி சற்று தாமதமாக வந்ததால், அவர் காமதேனுவின் பின்புறம் தான் இடம் கிடைத்தது.
அதனால் காமதேனுவின் அந்த பகுதியிலிருந்து வரும் கோமியம், சாணம் கூட மிக சிறப்பு வாய்ந்ததாக மாறியது. இரண்டும் லட்சுமியின் அம்சமானது.
🍁🍃🍁🍃🍁🍃🍁🍃🍁🍃🍁
காலையில் எழுந்ததும் சாணியை எடுத்து தண்ணீரில் கரைத்து வீட்டின் முன் சாணம் தெளிப்பதால், நம் விரல்களின் வழியாக பிரபஞ்ச சக்தி கிடைக்கும். தரித்திரம் நீங்கும், கிருமி நாசினியாக இருப்பதால் நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும்.
மகாலட்சுமியே வீட்டிற்கு வருவதால் சின்ன சின்ன பூச்சிகளால் ஏற்படக் கூடிய பிரச்சினைகள், நோய்கள் தீரும். இதனால் மருத்துவ செலவுகள் குறையும். செல்வம் பெருகும் என்பது ஐதீகம்.
🌹🌷🎋🌺🌸🌿🌷🌹🌺🎋🌹
*கோலம் இறைவனை ஈர்க்கக் கூடிய அம்சம் கொண்டது:*
நவ கிரகங்களுக்கும் தனித்தனி கோலங்கள் உள்ளன. அதனால் தான் நாம் வீட்டில் ஒரே மாதிரியாக கோலம் போடாமல் வெவ்வேறு வடிவில் போட்டுக் கொண்டிருக்கின்றோம்.
கோலத்தைப் பார்த்த உடன் தெய்வங்கள், அதிர்ஷ்ட தேவதைகள் உள்ளே வருவார்கள்.
💢💠💢💠💢💠💢💠💢💠💢
*அமாவாசை தினத்தில் கோலம் போடலாமா?*
கோலத்தைப் பார்த்து தெய்வங்கள், தேவதைகள் வருவார்கள்….
வீட்டில் கோலம் போட்டிருந்தால் ஆன்மாவாக இருக்கும் நம் முன்னோர்கள் வீட்டில் வர முடியாது.
நாம் அமாவாசை தினத்தில் முன்னோர்களை வழிபடும் போது அவர்கள் வீட்டில் வர முடியாத வண்ணம் கோலம் தடுக்கும் என்பதால் தான் அமாவாசை தினத்தில் கோலம் போடக் கூடாது என சொல்லியுள்ளனர்.
இப்படி மற்ற நாட்களில் கோலம்போட்டு தெய்வ சக்திகளை ஈர்ப்பது, அமாவாசை தினத்தில் முன்னோர்களின் ஆசி பெறுவதால் சுபிட்சம் ஏற்படும்.
இதனால் குடும்பத்தில் உள்ள அனைவரும் மிக ஆரோக்கியம், செல்வங்களோடு வாழலாம்.
💖💙💖💙💖💙💖💙💖💙💖
*வீட்டில் சாணம் தெளித்து கோலம் போட இடம் இல்லாதவர்கள் என்ன செய்வது?*
அடுக்குமாடி குடியிருப்பில் இருப்பவர்கள் சாணம் தெளித்து கோலம் போட முடியாத சூழலில் இருப்பவர்கள், வீட்டின் முன் இரு தீபங்களையாவது ஏற்றி வைப்பது நல்லது.
ஒவ்வொரு தெருவிலும் ஒரு விநாயகர் கோயில் இருக்கும்.
அந்த விநாயகர் கோயிலுக்கு சென்று சாணம் தெளித்து கோலம் போட்டு வணங்கி வரலாம்.
*அனைவரும் வளமுடன் நலமுடன் வாழ வேண்டும்.!*
*”ஹரி ஓம் நமச்சிவாய”*