வீடு மற்றும் நிலங்கள் விரைவில் விற்பனையாக சக்திமிக்க பரிகாரம்:
இந்த பரிகாரத்தை சனிக்கிழமை அன்று காலை 6 – 7 மணி சனி ஓரையில் அல்லது மதியம் 1 – 2 சனி ஓரையில் செய்ய வேண்டும். வெள்ளை நிற சோழிகள் 5 எண்ணிக்கை எடுத்துக்கொண்டு அதன் மத்தியில் சிறு துளையிட்டு கருப்பு நிற நூல் கொண்டு மாலை வடிவில் கோர்க்க வேண்டும். பின்னர் அந்த சோழிகளுக்குள் எந்த வீடு இடம் விற்பனை ஆக வேண்டுமோ அதன் மண் எடுத்து உள்ளே நிரப்ப வேண்டும்.
இவ்வாறு செய்த மாலையை எடுத்துக்கொண்டு போய் சலங்கை மரத்தின்(Babool Tree) வேரில் கட்டிவிட்டு அந்த மரத்தின் வேரில் 50 மில்லி நல்லெண்ணெய் ஊற்றிவிட்டு வந்துவிட வேண்டும். இது போல அடுத்த ஞாயிற்றுக்கிழமை வரை எண்ணெய் ஊற்றி வந்துவிட்டால் சம்பந்தப்பட்ட வீடு மனைகள் விரைவில் விற்பனையாகிவிடும்.
Tag: