இந்தத் தலத்து இறைவன்… வீடு- மனை வாங்குகிற யோகத்தை அருள்கிறார் என்பதால், இவருக்கு ஸ்ரீபூமிநாதர் என்கிற திருநாமம் அமைந்ததாம். இந்த கோவிலில் வாஸ்து பரிகார பூஜையும் விசேஷம்.
திருச்சியில் இருந்து துறையூர் செல்லும் வழியில், சமயபுரம் டோல்கேட்டில் இருந்து சுமார் 7 கி.மீ. தொலைவில் உள்ளது ஸ்ரீபூமிநாதர் கோவில். இந்தத் தலத்து இறைவன்… வீடு- மனை வாங்குகிற யோகத்தை அருள்கிறார் என்பதால், இவருக்கு ஸ்ரீபூமிநாதர் என்கிற திருநாமம் அமைந்ததாம். அம்பாள்- ஸ்ரீஅறம்வளர்த்த நாயகி.
இங்கே, வாஸ்து பரிகார பூஜையும் விசேஷம். நிலம் வாங்கும் முன்போ அல்லது கட்டட பணியில் தடை என்றாலோ, நிலத்தின் வட கிழக்கு மூலையில் இருந்து பிடிமண் எடுத்து, அதை மஞ்சள் துணியில் கட்டி, பூஜையறையில் வைத்து வணங்கி வரவேண்டும். பிறகு, வாஸ்து நாளில் இங்கு அந்தப் பிடிமண்ணை வைத்து ஸ்ரீபூமிநாதருக்கு பூஜை செய்து விட்டு, அந்தப் பிடிமண்ணுடன் பிராகார வலம் வந்து இங்கேயுள்ள மண்டபத்தில் கட்டிவிடவேண்டும். கட்டுமானப் பணிகள் தொடங்கியதும் கோயிலுக்கு வந்து, மண்டபத்தில் கட்டிய பிடிமண்ணை துணியில் இருந்து எடுத்து, கோயிலின் வில்வமரத்தடியில் கொட்டி விட்டு வணங்கினால், பிரச்னைகள் விலகி, கட்டடப் பணிகள் குறைவின்றி நடைபெறும் என்பது ஐதீகம்.