√ விவசாயம் :-
செவ்வாய் பூமிகாரகர், சந்திரன் பயன் தருபவர். செவ்வாக்கு சந்திரனது தொடர்பு இருந்தால் நல்ல விவசாயி ஆவார்.
சந்திரன் சிறப்பாக இருக்கும் ஜாதகரின் தோட்டத்தில் காய்கறிகள் கூட பெரிது பெரிதாக விளைகிறது , நல்ல விளைச்சலும் & வருமானமுடனும் இருக்கிறார்.
சந்திரன் கெட்ட ஜாதகரின் தோட்டத்தில் காய்கறிகள் பார்க்கவே நோஞ்சானாக இருக்கிறது, அப்படியே நல்ல விளைச்சல் இருந்தாலும் நல்ல விலை இல்லாமல் போகிறது, இவர்கள் விவசாயத்தை நம்பி பாதிக்கப்பட்ட நிலையில் இருக்கிறார், வருமானம் இன்றி இருக்கிறார்.
√ விவாயத்தில் தோற்றுப் போகிற ஜாதகர் :-
1. செவ்வாய் + ராகு சேர்க்கை
2. செவ்வாய் + கேது
3. சந்திரன் + ராகு
4. சந்திரன் + கேது
இப்படிபட்ட கிரகச் சேர்க்கை உள்ளவர்கள் விவசாயத்தில் தோற்றிப் போகிறார்கள், இவர்கள் தங்களுடைய பூமியை குத்தகைக்கு விடுதல் சிறப்பு..
√ செவ்வாய்க்கு அடுத்து ராகு | கேது உள்ளவர்கள் , செவ்வாய் உடன் ராகு | கேது உள்ளவர்கள் – இவர்கள் விவசாயத்தால் இலாபம் குறைந்து கடன் ஏற்படுகிறது.
√ விவசாயத்தில் நல்ல இலாபம் அடையும் ஜாதகர் :-
செவ்வாய் + சந்திரன் சேர்க்கை இருப்பவர்கள் இயற்கை காய்கறிகள் மன்வளத்தின் மீது மிகுந்த அக்கரைக் கொண்டவர்களாக இருக்கின்றனர்.
செவ்வாய் + சந்திரன் கிரகச் சேர்க்கைக்கு குரு சுக்கிரன் தொடர்பு இருப்பவர்கள் சிறப்பான விவசாயிகளாக இருக்கின்றார்கள்.