🕉🐕தாங்கமுடியாத அளவிற்கு எதிரிகளால் துன்பம் அடைபவர்களையும் , விபத்து , துர்மரணம் இவற்றிலிருந்தும் காப்பவர் பைரவர் மட்டுமே !! இத்துன்பங்களிலிருந்து விடுபட பைரவரைத் தான் சரணடைய வேண்டும் !! பைரவரிடம் பிரார்த்தனை செய்து கொண்டு , பிரார்த்தனை நிறைவேறும் வரை ஒவ்வொரு சனிக்கிழமையும் வெண்பூசணியில் பைரவருக்கு விளக்கு போட வேண்டும் !!
🕉🐕சனிக்கிழமை காலை ஆறு மணி முதல் எட்டு மணிக்குள் அல்லது கோவில் நடை சாத்துவதற்குள் வெண்பூசணியில் பைரவருக்கு விளக்கு போட வேண்டும் !!
🕉🐕சன்னதி திறந்திருக்கும் பைரவருக்கு மட்டுமே விளக்கு போட வேண்டும். பைரவரின் சிலைக்கு திரையிட்டு மூடியிருந்தாலோ , சன்னதியில் வாசல் கதவுகள் அடைக்கப்பட்டிருந்தாலோ அந்த பைரவருக்கு விளக்கு போடக் கூடாது !!
🕉🐕அறுபத்து நான்கு பைரவர்களில் எந்த பைரவருக்கு வேண்டுமானாலும் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் விளக்கு போடலாம்.
🕉🐕இதைச் செய்ய முடியாதவர்கள் தினமும் சாதாரணமான விளக்கு போடலாம் !! அதுவும் முடியாதவர்கள் வாரத்தில் ஒரு நாள் மட்டும் சாதாரண விளக்கு , ஏழு விளக்குகளாகப் போடலாம் !!