உங்கள் அருகிலிருக்கும் சிவன் கோயில்களில் உள்ள வில்வ மரம் மற்றும் வன்னி மரத்தை 26 முறை சுற்றி வலம் வந்து வேண்டிக் கொள்வதால் உங்களுடைய குறைகள் அனைத்தும் தீர்க்கப்படும். வழக்குகளில் ஈடுபட்டுள்ளவருக்கு சாதகமான தீர்ப்பு வரும்.
இவ்விரு மரங்களுக்கும் தெய்வீக சக்தி உண்டு. நீங்கள் கேட்பது அம்மரத்திற்கு நன்றாகவே கேட்கும் என்று சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது.
திருக்கோயில்களில் மரத்திற்கு கீழ் சர்ப்ப தெய்வங்கள் வீற்றிக்கும் இடத்தில் இரு நாகங்கள் பின்னிப் பிணைந்தது போல் இருக்கும் அல்லவா? அவருக்கு வெள்ளி தோறும் காலை பத்தரை முதல் பண்ணிரென்று மணிக்குள் ராகு காலத்தில் செவ்வரளி பூ சாற்றி, மஞ்சள் – குங்குமம் இட்டு, நெய் தீபம் ஏற்றி கணவன், மனைவி இருவர் பெயரிலும் அர்ச்சனை மற்றும் அபிஷேகம் செய்தால் கணவன்-மனைவி பிரச்சனைகள் தீரும். பிரிந்த தம்பதிகள் ஒன்று சேர்வார்கள்.