சில ஆலயங்களில் விஷ்ணு துர்க்கை வீற்றிருப்பதைக் காணலாம். அந்த அம்மனை வெள்ளிக்கிழமை தோறும் வழிபட்டு வந்தால் விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும். விவாகத்தில் ஏற்பட்ட பிரச்சினை அகலும்.
பால் பாயசம் நைவேத்தியமாக படைப்பது, விஷ்ணு துர்க்கை அம்மனுக்கு உகந்தது. எட்டு வெள்ளிக்கிழமை தொடர்ச்சியாக வழிபட்டால் நிச்சயம் வெற்றி கிட்டும்.