பசுஞ்சாண திருநீறு*
நாட்டு மாட்டு சாணத்தில் இருந்து தயாரித்த விபூதி (மிகவும் புனிதமானது)
*பலன்கள்:*
தலைவலி நீரேற்றம் தலைப்பாரம் இவற்றிற்கு திருநீற்றை வெளிப்புறம் பூச வேண்டும்.
பல்வலி, ஈறில் இரத்தம் படித்தல் இவற்றுக்கு திருநீருடன் கலப்படமற்ற சூடம்(கற்பூரம்) கலந்து பல்துலக்க வேண்டும்.
எலும்புத்தேய்மானம், உடல் எலும்பு வளர்ச்சி இன்மை, குழந்தைகளுக்கு பற்கள் திடீரென்று விழுதல் இவற்றுக்குத் திருநீற்றை தேனுடன் 500 மில்லி கிராம் முதல் 1 கிராம் வரை உண்ணலாம்.
திருநீறு கிருமிநாசினியும் கூட. அதனை உடல் முழுவதும் பூசுவதனால் உடலில் உள்ள துர்நாற்றம் மறையும் என இயற்கை மருத்துவம் கூறுகிறது.
துத்தநாகம், பொட்டாஷ் ஆகியவை விபூதியில் உள்ளன. விதைகளை பாதுகாக்க விபூதியை பயன்படுத்தலாம்.
டாலமைட் பவுடரில் இருந்து செயற்கையாக தயாரிக்கப்படும் விபூதியால் ஆரோக்கியம் பாதிக்கிறது.
விபூதி மதம் சார்ந்த விஷயமல்ல. மாட்டு சாணத்தில் இருந்தே ஒரிஜினல் விபூதி கிடைக்கிறது. ஒரிஜினல் விபூதி நோய் எதிர்ப்பு சக்தியுடையது
.
திருநீற்றை அனுதினமும் யார் ஒருவர் பூசி வருகிறாரோ, அவரைச் சுற்றியுள்ள துன்பங்கள் விலகி, சிவனின் திருவடி எய்துவர் .இமயமலையில் உடல்முழுவதும் விபூதி பூசிக்கொண்டு, உறைய வைக்கும் குளிரில் மேலாடை இல்லாமல் சர்வசாதாரணமாகச் சாதுக்களும் சந்நியாசிகளும் யாத்திரை மேற்கொண்டிருப்பார்கள்.
அதன் பின்னால் ஒளிந்திருக்கிறது பெரும் அறிவியல் உண்மை. விபூதியானது உடலில் உள்ள சூட்டைத் தக்கவைத்துக் கொள்ளும் தன்மையைக் கொண்டது. வெளியிருந்து வரும் குளிரைத் தடுத்து, உடலைக் காக்கிறது.
கடைகளில் கிடைக்கும் விபூதிகளில் இந்த தன்மை இருக்காது.ஏனென்றால், அவை விபூதியே அல்ல. நாட்டுப் பசுவின் சாணத்திலிருந்து உருவாக்கப்படும் வாசமற்ற விபூதியே சுத்தமான விபூதி
காராம்பசுவின் சாணத்தை நிலத்தில் விழும் முன் பிடித்து, அதன் கோமயத்தால் ஈரமாக்கி, உருண்டைகள் பிடித்து காய வைக்க வேண்டும்.
அதை, திரிபுர ஸம்ஹார காலம் என்று வர்ணிக்கக் கூடிய கார்த்திகை மாத பெளர்ணமியும், கிருத்திகை நக்ஷத்திரமும் இணைந்த கார்த்திகை தீபத் திருநாளில், எரியூட்ட வேண்டும். அது திறந்த வெளியில் தானாகவே ஆறவேண்டும். மார்கழி மாதம் முழுவதும் – பனி பொழிந்து, அந்த சாணச் சாம்பல் சற்றே நிறம் மாறிக்கொண்டிருக்கும். தை மாதம் முழுவதும் அச்சாம்பலை கிளறிக்கொண்டேயிருக்க வேண்டும்.
பனி பெய்ய பெய்ய சாம்பலின் கரிய நிறம் மாறி வெளிறும்.
மாசி மாதத்தின் மஹா சிவராத்திரியின் காலை நேரத்தில் அச்சாம்பலை எடுத்து, வஸ்திரகாயம் செய்ய வேண்டும். அதை, சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்த பிறகு, சிவபக்தர்கள் தரிக்க வேண்டும்.
மேலே சொன்ன முறை மிக மேன்மையான முறை.மற்றும் சில முறைகளும் உள்ளன.
(சாந்திகபஸ்மம், காமதபஸ்மம், பெளஷ்டிகபஸ்மம்)
பரமசிவனின் ஐந்து முகங்களிலிருந்தும் தோன்றிய நிலம், நீர், காற்று, ஆகாயம், நெருப்பு ஆகிய பஞ்சபூதங்களின் தன்மையை விபூதி கொண்டிருக்கின்றது.
விபூதியை அனைத்து நிலையிலிருப்பவரும் பூசிக்கொள்ளலாம் என்று ஸூதஸம்ஹிதை வலியுறுத்துகின்றது. (பிரம்மச்சரியம், கிரஹஸ்தம், வானப்ரஸ்தம், சன்யாசம்)
சிவாலயங்களில், விபூதியை பிரஸாதமாக வலது உள்ளங்கையில் மட்டுமேதான் வாங்க வேண்டும். ஆண்கள் விபூதியை திரிபுண்டரமாகவும் (விபூதியைத் தண்ணீரில் குழைத்து நெற்றியில் மூன்று கிடைக்கோடுகளாகவும்), உத்தூளனமாகவும் (தண்ணீரில்லாமல் வெறும் விபூதியை) அணிந்து கொள்ளலாம் என்றும்,
பெண்கள் – தண்ணீர் குழைக்காமல் மட்டுமே இட்டுக்கொள்ள வேண்டும் (உத்தூளனமாக) என்றும் சாஸ்திரங்கள் வலியுறுத்துகின்றன.
பெண்கள் – ஆட்காட்டி விரல் அல்லது மோதிர விரலால் விபூதியை எடுத்து, நெற்றியில் ஒற்றைக் கோடாக மட்டுமே அணிந்து கொள்ள வேண்டும். (சிவ தீட்சை பெற்ற பெண்கள் மூன்று கோடுகளாக அணியலாம்)
விபூதிப் பூசிக்கொள்ளும் போது, சிவ பஞ்சாக்ஷர மந்திரத்தையோ அல்லது சிவசிவ என்றோ சொல்லிக்கொண்டேதான் தரிக்க வேண்டும்.
ஆண்கள் – விபூதியை தண்ணீரில் குழைத்து, ஆட்காட்டி விரல், நடுவிரல் மற்றும் மோதிர விரல் கொண்டு மூன்று கிடைக்கோடுகளாக,நெற்றியிலும், மார்பிலும், தொப்புளுக்கு மேலும், முழங்கால்கள் இரண்டிலும், இரு தோள்களிலும், இரு முழங்கைகளிலும், மணிக்கட்டுகள் இரண்டிலும், இரு விலாப் புறங்களிலும், கழுத்திலும் தரிக்க வேண்டும். (சிலர் இரு காதுகளிலும், சிலர் மேல் முதுகிலும், பின்கழுத்திலும் தரிப்பார்கள்)
காலை, மதியம், மாலை மூன்று நேரங்களிலும், பூஜை காலங்களிலும் மிக நிச்சயம் விபூதி தரிக்க வேண்டும்.
பஸ்மாபிஷேகம் – பல்வேறு தீட்டுக்களை அகற்றவல்லது.
குளிக்கும் நீரில் விபூதியைத் தூவி விட்டு, அந்த விபூதி கலந்த தண்ணீரில் தலை முழுக எவ்விதமான தீட்டுக்களும் அகன்றுவிடும்.
பயம் நீங்கவும், ஜுரம் நீங்கவும், உடல் உபாதைகள் நீங்கவும் விபூதி பயன்பட்டிருக்கின்றது.
விபூதி இட்டுக்கொண்டிருப்பவரை சிவ அம்சமாகவேக் கருதி வழிபடும் வழக்கம் உண்டு.விபூதி நோய்களை நீக்கும் அருமருந்தாகவும், சிவத்தொண்டிற்கு வழிகாட்டியாகவும், சிவசிந்தனை மேலிடுவதற்கு உதவும் சாதனமாகவும் விளங்குகின்றது.