சிவ மந்திரம் சொல்லி நாம் செய்கிற பூஜை மிக மிக வலிமையானது. அதேபோல், சிவ பூஜைகளிலும் வழிபாடுகளிலும் பங்கேற்கும் போது, சிவ ஸ்லோகத்தைச் சொல்லி வழிபடுவது இன்னும் மகத்தான பலன்களைத் தந்தருளும் என்கிறார்கல் ஆச்சார்யப் பெருமக்கள்.
சிவபெருமானின் இந்த ஸ்லோகத்தை சொல்லி வழிபடுங்கள்.
விபூதி சுந்தர மஹேஸ்வர ஹர
சிவசிவ ஹரஹர மஹாதேவ
வில்வதள ப்ரிய சந்திர கலாதர
சிவசிவ ஹரஹர மஹாதேவா
கங்காதர ஹர சாம்ப சதாசிவாய
சிவசிவ ஹரஹர மஹாதேவா
த்ரியம்பகாய லிங்கேஸ்வராய
சிவசிவ ஹரஹர மஹாதேவா
மெளலீஸ்வராய யோகேஸ்வராய
சிவசிவ ஹரஹர மஹாதேவா
குஞ்சேஸ்வராய குபேராஸ்வராய
சிவசிவ ஹரஹர மஹாதேவா
நடேஸ்வராய நாகேஸ்வராய
சிவசிவ ஹரஹர மஹாதேவ
கபாலீஸ்வரய்யா கற்கடேஸ்வராய
சிவசிவ ஹரஹர மஹாதேவா
போலோ ஹரஹர சிவசிவ மஹாதேவா
இந்த ஸ்லோகத்தைச் சொல்லி ஒரேயொரு வில்வம் சமர்ப்பித்து சிவனாரை வழிபட்டால், லட்சம் வில்வதளத்தை சமர்ப்பித்து வழிபட்ட பலன்கள் கிடைக்கப் பெறலாம் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.