நாம் அனைவரும் கோவிலுக்கு செல்லும்போது, தெய்வத்திற்கு அபிஷேகத்திற்காகவும், அர்ச்சனை செய்யவும் பூஜை பொருட்கள் வாங்கிசெல்வோம். ஆனால் நாம் வாங்கி செல்லும் பூஜை பொருட்கள், எதற்காக வாங்குகின்றோம் அதன் அர்த்தமும், தத்துவமும் என்னவென்று நம்மில் பலருக்கு தெரியாது. சில பூஜை பொருட்களுக்கான அர்த்தத்தையும், தத்துவத்தையும் பார்க்கலாம்.
தேங்காய் : தேங்காயின் ஓடு மிகவும் வலுவாகவும், கடினமாகவும் இருக்கும். அதை இரண்டாக உடைக்கும்போது வெண்மையான தேங்காய் பருப்பும், இனிமையான தண்ணீரும் கிடைக்கின்றது. அதுபோல் அகம்பாவம் என்னும் ஓட்டை உடைக்கும்பொழுது வெண்மையான மனமும், அதிலிருந்து உருவாகும் எண்ணங்கள் இனிமையாகவும், அன்பாகவும் இருக்கும்.