தியானம் செய்பவர்கள் தலையில் குட்டி விநாயகரை வழிபட்டால் மன ஒருமைப்பாடு ஏற்படும் என்பது நம்பிக்கை. வலது கையால் இடது காதையும், இடது கையால் வலது காதையும் பிடித்து உட்கார்ந்து எழுந்து தோப்புக் கரணம் போட்டு உட்கார்ந்து, எழுவதால் நரம்புகள் தூண்டப்பட்டு, ரத்த ஓட்டம் மூளைக்கு செல்வதாக கண்டறியப்பட்டுள்ளது. இதனால் மன எழுச்சியும்,சுறுசுறுப்பும் உண்டாகிறது.
மேலும் மூஷிக வாகனனுக்கு 1, 3, 5, 7, 9, 18 என்ற ஒன்பதின் பெருக்கமாக தேங்காயை சிதறு காயாக உடைத்து வழிபடும் பழக்கமும் நிலவி வருகிறது. மகோற்கடர் என்கிற முனிவராக அவதாரம் செய்த விநாயகர் காசிப முனிவரின் ஆஷ்ரமத்தில் தங்கியிருந்த சமயம், ஒரு யாகத்திற்கு புறப்பட்ட போது ஒரு அசுரன் அவர்களைத் தடுத்து நிறுத்தினான்.
விநாயகர் யாகத்திற்காகக் கொண்டு சென்ற கலசங்களின் மேலிருந்த தேங்காய்களை அவன் மீது வீசி அந்த அசுரனைப் பொடிப் பொடியாக்கினார். எந்த செயலுக்கு கிளம்பினாலும் தடைகள் ஏற்பட்டால் அதை நீக்கி வெற்றி பெற விநாயகரை வணங்கிச் செல்வது வழக்கம். அதன் மூலம் சிதறுகாய் உடைக்கும் வழக்கமும் உருவானது.