தினமும் ஓம் எனும் பிரணவ மந்திரத்துடன் சேர்த்து சூரியபகவானுடைய பன்னிரண்டு திருநாமங்களையும் சொல்லி வணங்கியபடி செய்ய வேண்டும்.
ஒவ்வொரு நமஸ்காரமும் நம் உடல் உறுப்புகளான மூளை, இருதயம், வயிற்றிலுள்ள சுரப்பிகளைத் தூண்டும் ஓம் எனும் பிரணவ மந்திரத்துடன் சேர்த்து சூரியபகவானுடைய பன்னிரண்டு திருநாமங்களையும் சொல்லி வணங்கியபடி செய்ய வேண்டும். நமக்கு மன, உடல், ஆத்ம நலன் தரும் சூரியபகவானின் திருநாமங்களை உரக்க உச்சரிப்போம்.
ஓம் மித்ராய நமஹ…… சிறந்த நண்பன்
ஓம் ரவயே நமஹ…… போற்றுதலுக்குரியவன்
ஓம் சூர்யாய நமஹ…… ஊக்கம் அளிப்பவன்
ஓம் பானவே நமஹ…… அழகூட்டுபவன்
ஓம் ககாய நமஹ…… உணர்வுகளுக்கு வலிமை தருபவன்
ஓம் பூஷ்ணே நமஹ…… புத்துணர்ச்சி தருபவன்
ஓம் ஹிரண்யகர்ப்பாய நமஹ…… ஆற்றல் அளிப்பவன்
ஓம் மரீசயே நமஹ…… நோய்களை அழிப்பவன்
ஓம் ஆதித்யாய நமஹ…… கவர்ந்திழுப்பவன்
ஓம் சவித்ரே நமஹ…… சிருஷ்டிப்பவன்
ஓம் அர்க்காய நமஹ…… வணக்கத்திற்கு உரியவன்
ஓம் பாஸ்கராய நமஹ…… ஒளிமிகுந்து பிரகாசிப்பவன்.
மேற்கண்ட மந்திரத்தை உச்சரித்தவாறு சூரிய நமஸ்காரம் செய்யும்போது நமது மனம் சிதறாமல் ஒருமுகப்படுகிறது. மந்திரத்தை உச்சரிக்கும்போது அதன் அதிர்வு நமது உடலின் எல்லா பகுதிகளுக்கும் சென்று பல உணர்வுகளை ஏற்படுத்தும் என்பது விஞ்ஞான பூர்வமான உண்மையாகும்.இத்துணை சக்தி வாய்ந்த நம் கண்முன்தெரியும் கடவுளாகிய சூரியனை தினம் நமஸ்கரித்து நோய்களின்றும் விடுபட்டு நலமுடன் வாழ்வேமே..