🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉🕉🕉
*துளசிச் செடி மகிமைகள்:*
🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉
( 1 ). ஒவ்வோர் வீட்டிலும், துளசி
செடி அவசியம் இருக்கனும். சிறிது கருப்பாக இருக்கும் கிருஷ்ண துளசி எனில் இரட்டைச் செடியாகத்தான் வளர்க்க வேண்டும்.!
( 2 ). வீட்டின் முன்னே,அல்லது
முற்றத்திலோ வளர்க்கவும்.!
( 3). நீரை கடவுள் பெயர் சொல்லி, தெளித்து விட்டு, வேரில் அளவோடு ஊற்றவும்.!
( 4 ). வீட்டை விட்டு வெளியே கிளம்பும் போது, துளசியை வணங்கிவிட்டுச் சென்றால் எந்த சகுன பாதிப்பும் இல்லை!
( 5 ) .வீட்டிற்கு திரும்பியபின், கை கால் கழுவிய பின், துளசியை வணங்கினால் தீய சக்திகளின் தொல்லையில்லை
( 6 ). பெண்கள் திருமணமாகிப் புகுந்த வீட்டிற்கு செல்லும் போது துளசியிடம் விடை பெற வேண்டும். பிறந்த வீட்டிற்கு வரும் போதெல்லாம் நீருற்றி வழிபட வேண்டும்.
கீழ் கண்ட சுலோகத்தை சொல்லி வணங்கி தீப,தூப நிவேதனங்களுடன் துளசியை
பூஜித்து வர வறுமை அகலும்,திருமணப்பேறு உண்டாகும் ,சகல
செளபாக்கியங்களும்
கிடைக்கும்.
கீழ்கண்ட துளசியின் பெயர்களை அர்த்தம் அறிந்து படிப்பவனுக்கு அஸ்வமேதயாகம் செய்த பலன் கிடைக்கும்.
“ப்ருந்தா, ப்ருந்தாவணி, விச்வ பூகிதா, விச்வபவானி, புஷ்ப ஸாரா,நந்தநீச துளசி,
கிருஷ்ண ஜீவினி ஏதத நாமாஷ்டகம் சைவ ஸ்தோத்திரம் நமார்த்த ஸம்யுக்தம்
ய: படேத் தாம்ச சம்பூஜிய சோச்வமேத பலன் லபேத்”
இதன் அர்த்தம்
பிருந்தாதேவியை நான் பூஜிக்கிறேன்
பிருந்தாவணியை நான் பூஜிக்கிறேன்
விச்வ பூஜிதாவை நான் பூஜிக்கிறேன்
விச்வபவானியை நான் பூஜிக்கிறேன்
புஷ்பஸாராவை நான் பூஜிக்கிறேன்
நந்தினியை நான் பூஜிக்கிறேன்
கிருஷ்ணவேனியை நான் பூஜிக்கிறேன்
துளசியை நான் பூஜிக்கிறேன்.
கீழ்க்காணும் ஸ்லோகத்தைக் கூறி துளசியை நமஸ்கரிக்க சகல சம்பத்துகளும் உண்டாகும்.
*துளசி வந்தனம்:*
—————————
“துளஸி ஸ்ரீ சகி ஸுபே பாபஹாரிணி புண்யதே
நமஸ்தே நாரதநுதே நாராயண மன:ப்ரியே’
அர்த்தம்: திருமகளின் தோழியும், பாபத்தைப் போக்கி புண்ணியம் அருள்பவளும், நாரதரால் வணங்கப்பட்டவளும், நாராயணரின் மனதுக்குப் பிரியம் உடையவளுமான துளசிதேவியே உன்னை வணங்குகிறேன்…