சொந்த வீடு வாங்குவது சிலருக்கு பெரிய கனவு என்றால், பலருக்கு வாங்கிய வீட்டில் இருக்கும் வாஸ்து குறைபாடுகளால் ஏற்படும் பிரச்சனைகளை தீர்ப்பதே பெரும் போராட்டமாக இருக்கும். வாஸ்துவினால் தான் உங்கள் வீட்டில் பிரச்சனைகள் வந்து கொண்டிருக்கிறது என்று தீர்க்கமாக தெரியும் போது அதனால் கலங்க வேண்டிய அவசியமில்லை. வாஸ்து தோஷத்தை நீக்க சுலபமான பரிகாரம் உள்ளது. அதை செய்தாலே போதும். வாஸ்து தோஷம் நீங்கி பிரச்சனைகள் குறைய ஆரம்பித்து விடும். நீங்களே பிரச்சனைகள் நீங்குவதை நன்றாக உணரலாம். இந்த பரிகாரத்தை எப்படி செய்வது என்று இப்பதிவில் இனி விரிவாக காண்போம் வாருங்கள்.
உங்கள் வீட்டின் நிலை கதவின் நீளத்தை மற்றும் அகலத்தை பொறுத்து அருகம்புல்லை மாலையாக கோர்த்து அணிவிக்க வேண்டும். நீளத்திற்கேற்ப வெற்றிலையயையும் மாலையாக கோர்த்து அணிவித்தால் மஹாலக்ஷ்மி அந்த வீட்டில் குடியேறுவாள். இதனை வெள்ளி அல்லது செவ்வாய் கிழமைகளில் செய்வது நல்லது. மறுநாள் அவற்றை நீக்கி தண்ணீர் கொண்ட பாத்திரத்தில் போடவும். சிறிது நேரம் ஊறியவுடன் அந்த தண்ணீரை வீடு முழுவதும் தெளித்து விடுங்கள். வீட்டை சுற்றிலும் வெளிப்புற பகுதிகளிலும் அந்த நீரை தெளித்து வரவும்.
இவ்வாறு செய்து முடித்த பின்னர் அந்த மாலைகளை ஒரு வெள்ளை துணியில் கட்டி ஆறு, குளம் அல்லது ஏரிகளில் கொண்டு சென்று போட்டு விடுங்கள். வாஸ்துவினால் ஏற்பட்ட எல்லா தோஷங்களும் நீங்கி விடும். குடும்பத்தில் இருந்து வந்த அனைத்து பிரச்சனைகளும் நீங்கி மகிழ்ச்சி நிறைந்திருக்கும்.
இது போன்ற வாஸ்து தோஷங்கள் ஏற்படாமல் இருக்க புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள செவலூர் என்ற ஊரில் அமைந்திருக்கும் பூமிநாதர் ஆலயத்தில் வாஸ்து நாளன்று வாஸ்து பூஜை செய்யப்படுகிறது. அப்போது அங்குள்ள பூமிநாதரை வழிபட்டு ஒரு செங்கல்லை வாங்கி யாகத்தில் வைத்து எடுத்து சென்று கட்டிடம் கட்டினால் வாஸ்து தோஷங்கள் ஏற்படாமல் இருக்கும் என்று நம்பப்படுகிறது.
வாஸ்து நாளன்று இங்கு வெளியூர், வெளிநாடுகளில் இருந்தும் கூட மக்கள் செங்கல் வாங்கி பூஜை செய்து கொண்டு செல்கின்றனர். இங்குள்ள சிவ லிங்கத்திற்கு 16 பட்டைகள் இருப்பது விஷேஷமானது. பூமா தேவியே தவம் இருந்து உருவாக்கிய லிங்கம் என்று இங்குள்ள கல்வெட்டுகள் கூறுகிறது.
இது போன்ற பல அற்புதமான திருத்தலங்கள் மக்களின் பார்வைக்கு தெரியாமலே இருக்கிறது. இக்கோயில் மிகவும் பழமை வாய்ந்ததாக கருதப்படுகிறது. வேம்பு, ஆல், அரசு போன்ற தெய்வீக மரங்களை தெரியாமல் வெட்டிவிடுதல், புற்று இருந்திருந்தால் அதனை தெரியாமல் கலைத்து விடுதல் போன்ற காரணத்திற்காகவும் தோஷங்கள் ஏற்படும். வாஸ்து தோஷம் மட்டும் இன்றி தொழில் தடை, வியாபார விருத்தியின்மை, விவசாயத்தில் நஷ்டம், காரியத் தடைகள் என்று பல காரணங்களுக்காக வழிபட்டு செல்கின்றனர்.