நாள், திதி, யோகம், கரணம், நட்சத்திரம் ஆகிய பஞ்ச (ஐந்து) அங்கங்களை கொண்டதற்கு பெயர், ‘பஞ்சாங்கம்.’ திதியை அடிப்படையாகக் கொண்டு வழிபாடுகளை மேற்கொண்டால் விதி மாறும். நீண்ட ஆயுளைப் பெற வேண்டுமானால், நாளை அடிப்படையாக வைத்து வழிபாட்டை முன்னெடுக்க வேண்டும். பாவங்கள் அகல வேண்டுமானால், நட்சத்திரங்களை அடிப்படையாகக் கொண்டு வழிபாட்டை செய்ய வேண்டும்.
நோய்கள் தீர வேண்டுமானால், யோகத்தை அடிப்படையாக வைத்து இறைவனை வழிபட்டு வர வேண்டும். காரியங்களில் வெற்றி ஏற்பட வேண்டுமானால், கரணங்களையும், நட்சத்திரத்தையும் அடிப்படையாக வைத்து வழிபட வேண்டும். இவ்வாறு திதி, நாள், யோகம், கரணம், நட்சத்திரம் ஆகிய பஞ்ச அங்கங்களையும் அடிப்படையாகக் கொண்டுதான் பஞ்சாங்கத்தை நாம் பார்க்கின்றோம்.
இதன் அடிப்படையில் தெய்வ வழிபாட்டை மேற்கொண்டால், வாழ்வில் சந்தோஷங்களை நாளும் சந்திக்கலாம். ‘ஐந்திற்கு இரண்டு பழுதில்லை’ என்பார்கள். அதன்படி நாள், நட்சத்திரம் இரண்டும், நமக்கு அனுகூலமாக ஒன்று கூடும் நேரத்தில் செய்யும் வழிபாடு உடனடியாகப் பலன் தரும்.