6 முதல் 8 மணி நேர தூக்கம் என்பது அனைவருக்கும் அத்தியாவசியமானது .
முன்னோர்கள் 8 – 9 மணிக்கு தூங்க சென்று காலை 4 மணிக்கு எழும் பழக்கத்தை உடையவர்கள். இந்த தலைமுறை தான் உறக்கத்திற்கான ஒழுக்கம் இல்லாமல் ஆந்தை மனிதர்கள் ஆகிவிட்டோம்.
ஸ்டார் பக்ஸின் Howard Schultz, Michelle Obama, Apple நிறுவனத்தின் Tim Cook என சாதனையாளர்கள் காலை 5 மணிக்கு முன் விழிப்பவர்கள். வாழ்வில் அடுத்த கட்டம் நோக்கி செல்ல வேண்டும் என்றால் காலை சூர்யோதத்திற்கு முன் எழுந்திருங்க தான் வேண்டும்.
⏰காலை 4 முதல் 5 மணிக்கு எழுந்திருக்கும் பழக்கத்தை உருவாக்க வேண்டும். குறைந்தபட்சம் 5:30 மணிக்காவது எழுதிட வேண்டும்.
⏰அன்றாட வேலைகளை சுறுசுறுப்பாக செய்யவும் உடல் ஆரோக்கியமாக இருக்கவும் சூர்யோதத்திற்கு முன்பு எழுந்து கொள்ள வேண்டும்.
⏰விடுமுறை நாட்களிலும் இந்த வழக்கத்தை கடைபிடிக்க வேண்டும்.
⏰4 முதல் 6 மணி வரை எந்த கவனச் சிதறல் இல்லாமல் உங்கள் வேலைகளை செய்வதற்கு ஏற்ற நேரம். மூளை புத்துணர்வுடன் இயங்குவதால் கிரியேட்டிவிட்டி, வேலையில் புது யுக்திகளை கட்டமைக்க ஏற்ற நேரம். முதல் 20 நிமிடங்கள் உடற்பயிற்சியுடன் ஒரு நாளை ஆரம்பிக்க வேண்டும்.
⏰தூங்குவதற்கான நேரத்தை திட்டமிட்டு ஒரு வழக்கத்தை உருவாக்கி பின்பற்றினால் காலை குறித்த நேரத்தில் எழுந்திருக்கும் பழக்கம் உருவாகும்.
தூங்குவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பு மொபைல் தொலைக்காட்சி லேப்டாப் போன்றவற்றை பயன்படுத்துவதை தவிர்த்துவிட வேண்டும். பளீர் வெளிச்சத்தை பார்க்கும் மூளை விழித்திருப்பதற்கான நேரம் என நினைத்துவிடும். இதனால் பலர் தூக்கம் இன்றி தவிக்கிறார்கள்
⏰மாலை 6 மணி முதலே மொபைலை நைட் மோடுக்கு மாற்றி விடுதல் நல்லது.
⏰தூங்குவதற்கு முன்பு குறித்து புத்தகத்தை வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளலாம். அல்லது டயரி எழுதும் பழக்கத்தையோ அன்றன்று கணக்கு வழக்குகளை எழுதும் பழக்கத்தையோ ஏற்படுத்திக் கொள்ளலாம்.
⏰படுக்கை தூங்குவதற்காக மட்டும் ஆனதே. அதில் அமர்ந்து வாசிப்பது, மொபைல் லேப்டாப் பார்ப்பதோ, உண்பதோ கூடாது. படுக்கை விழித்திருந்து செய்யும் வேலையோடு தொடர்பு படுத்தி விடும்.
⏰மதிய நேர தூக்கம் 15 முதல் 30 நிமிடங்களுக்கு உள்ளாக முடித்துவிட வேண்டும். அதிக பகல் தூக்கம் இரவு தூக்கத்தை பாதிக்கும்.