அன்பு குழந்தையே…
உனக்கு நான் அடிக்கடி கூறுகிறேன், பொறுமையோடு, நம்பிக்கையோடு இரு.
தூக்கம் இல்லை, எதையும் சிந்திக்க முடிய வில்லை, ஏன் ஏதற்காக,வாழ வேண்டும், என்று மனதில் தோன்றும் எண்ணங்களில் இருந்து முதலில் வெளியே வா.
நான் சொல்ல வருவதை கொஞ்சம் காது கொடுத்துக் கேள். வாழ்க்கை என்றாலே ஏற்றம் இறக்கம் கலந்த ஒன்று. அதை லாவகமாக நகர்த்தி செல்வதில் தான் சிறப்பு.
உலகில் எல்லோர் வாழ்க்கையிலும் எல்லா சூழலும் ஒன்று போல அமையாது. அன்பு, காதல்,தேடல், வளர்ச்சி, ஆசை ஆகிய எதுவும் அளவுக்கு மீறி போகும் போது சிக்கல் தான்.
அடுத்தவர்களின் துயரங்களை கேட்கும் போது அதை ஆழ்மனதிற்கு கொண்டு சென்று நம் வாழ்க்கையிலும் இப்படி நடக்குமோ என்று நீயே கற்பனையாக யோசிக்காதே.
அந்த சந்தேகமே உண்மையாக உன்னைச் சுற்றியுள்ளவர்களிடம் இருந்து உன்னை பிரித்து விடும். இதை எப்படி சொல்வது என்ற எண்ணம் எல்லாம் வேண்டாம்.
மனதில் உள்ள குப்பைகளை உனக்கு நம்பிக்கை குரியவர்களிடம் கொட்டி விடு, அல்லது ஒரு காகிதத்தில் எழுதி பிறகு அதை அக்கினிக்கு இறையாக்கி விடு.
மனதை ஒருநிலைப் படுத்தி தியானம் செய். தியானத்தின் போது எல்லா எதிர்மறை சக்தி என்னை விட்டு விலகிவிடவேண்டும் என்ற எண்ணத்தோடு தியானம் செய்.
தோல்விகள் நிரந்திரமல்ல என்று எதையும் புரிந்து ஏற்று கொண்டால் அழுத்தம் வராது மாறாக நேர்மறை எண்ணங்கள் உன்னை சூழ்ந்து பாதுகாக்கும்.
உனக்கு எல்லா சூழ்நிலைகளிலும் நான் துணை நிற்பேன். என் வார்த்தைகள் மீது நம்பிக்கை வைத்து செயல்படு.மீதியை நான் பார்த்துக்கொள்கிறேன்.
நல்லதே நடக்கும்… ஓம் ஸ்ரீ சாய் ராம்…
01.07.2019.. நேசமுடன் விஜயராகவன்…