27 நட்சத்திரங்களில் இரண்டாவதாக வரும் நட்சத்திரம் பரணி நட்சத்திரம் ஆகும். நவகிரகங்களில் சுகபோகங்களுக்கு அதிபதியான சுக்கிர பகவான் இந்த பரணி நட்சத்திரத்தின் அதிபதியாகிறார். சுக்கிரனுக்குரிய நட்சத்திரம் என்பதால் பெரும்பாலும் வசதிமிக்க குடும்பங்களிலேயே பிறக்கின்றவர்களாக பரணி நட்சத்திரகாரர்கள் இருக்கின்றனர். பரணியில் பிறந்தவர் தரணியை ஆள்வார் என பழமொழி கூறப்பட்டாலும் எல்லா பரணி நட்சத்திரக்காரர்களின் நிலையம் அவ்வாறு இருப்பதில்லை. பரணி நட்சத்திரக்காரர்கள் அனைவரும் தங்களின் வாழ்வில் பல சிறப்பான பலன்களை பெறுவதற்கு கீழ்கண்ட பரிகாரங்களை நம்பிக்கையுடன் செய்து வந்தால் நிச்சயமான பலன்கள் உண்டாகும்.
பரணி நட்சத்திரத்தின் அதிபதியாக சுக்கிர பகவான் இருக்கிறார். இந்த நட்சத்திரத்தின் அதிதேவதையாக “எமதர்மராஜன்” இருக்கிறார். பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சிறந்த பலன்களை பெறுவதற்கு வெள்ளிக்கிழமைகளில் சுக்கிர பகவான் மற்றும் “மகாலட்சுமி” வழிபாட்டை மேற்கொண்டு வர வேண்டும். தீபாவளி, பொங்கல் போன்ற தினங்களில் தெற்கு திசை நோக்கி எமதர்மராஜனை வழிபடுவதால் துர்மரணம் ஏற்படும் தோஷம் நீக்கி, நீண்ட ஆயுளை உங்களுக்கு அளிப்பார் எமதர்மன்.
3×3 என்கிற அளவில் ஒரு வெள்ளை நிற காகிதத்தை எடுத்து கொண்டு, அதில் சிவப்பு மை கொண்ட எழுதுகோல் மூலம் மூன்று வட்டமான செந்நிற புள்ளிகள் வரைந்து, லேமினேட் செய்து உங்கள் பண பெட்டி, பர்ஸ் போன்றவற்றில் வைத்து கொள்வது உங்களுக்கு பொருளாதார ரீதியில் அதிர்ஷ்டங்களை உண்டாக்கும். உங்களின் நட்சத்திர தினத்தில் பிறருக்கு கடன் கொடுக்கவோ, நீங்களும் கடன் வாங்கவோ கூடாது. வீட்டு உபயோகத்திற்கு பரணி நட்சத்திர தினத்தில் உங்கள் வீட்டிற்கு 5 கிலோ சர்க்கரை அல்லது 5 கிலோ கல்லுப்பு வாங்கி வீட்டில் வைப்பது வீட்டில் வீண் செலவுகள் ஏற்படாமல் தடுக்கும் சிறந்த பரிகாரம் ஆகும்.