பணத்தை சேர்ப்பதற்கு பலவகையான தாந்திரீக முறைகள், வசிய முறைகள், வழிபாட்டு முறைகள் இருந்து வந்தாலும், அந்த காலத்திலிருந்தே இருந்துவந்த ஒரு புதையல் ரகசியத்தை பற்றித்தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். நாம் கேள்விப்பட்டு இருப்போம் அல்லவா? சில இடங்களில் ‘பித்தளை சொம்பு நிறைய தங்க நாணயங்கள் கிடைத்தது. பொற்காசுகள் கிடைத்தது. அந்த காலத்தில் ராஜாக்கள் ஆண்ட போது அவர்கள் பயன்படுத்திய நாணயங்கள் அது.’ என்று!, இப்போது நாம் தெரிந்துகொள்ள போகின்ற இந்த பரிகாரத்திற்க்கும், புதியலுக்கும் கட்டாயம் சம்பந்தம் உள்ளது. அது என்ன புதையல் பரிகாரம்? அந்த பரிகாரத்தை எப்படி செய்ய வேண்டும் என்பதை பற்றி தெரிந்து கொள்ளலாமா?
அந்தக் காலத்தில் ராஜாக்கள் தாங்களிடம் இருக்கும் பணத்திற்கும், பொக்கிஷத்திற்கும் பாதுகாப்பு இல்லை என்று சொல்லி, அந்தப் பணத்தை எல்லாம் ஒரு பித்தளை அண்டாவிலோ அல்லது செம்பு அண்டாவிலோ போட்டு ஒரு மஞ்சள் துணியை கட்டி, அதை பாதுகாப்பதற்காக பூமாதேவியிடம் ஒப்படைத்து விடுவார்களாம். அதாவது, பொக்கிஷங்களை பூமியில் புதைத்து வைத்து தான் பாதுகாப்பார்கள். அந்தக் காலத்தில் மன்னர்கள் புதைத்து வைத்த அந்த புதையல் தான் இன்று நம் கைகளுக்கு கிடைக்கிறது. இது நாம் எல்லோரும் அறிந்ததே!
மன்னர்கள் அவர்கள் கையில் இருந்த பொக்கிஷங்களை பூமியில் புதைத்து வைத்த அடையாளத்திற்கு, அதன்மேல் செடிகளை வளர்த்து வருவார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. இப்படி செய்யும் பட்சத்தில் அவர்கள் செல்வச்செழிப்பு மிகுந்தவர்களாகவும் வாழ்ந்து வந்தார்கள், என்று சொன்னால் நிச்சயம் அது பொய்யாகாது. அதாவது, அவர்களிடம் இருந்த பொற்காசுகள், நாணயங்கள் இவைகள் எல்லாமே பன்மடங்காக பெருகிக் கொண்டுதான் இருந்தது. அது எப்படி என்றால், பூமியிலிருந்து வளர்கின்ற செடிகொடிகள், எவ்வாறு செழிப்பாக வளர்கின்றதோ, அதே போல் தான் பூமியில் புதைத்து வைத்திருக்கும் பொற்காசுகளும், பன்மடங்காகப் பெருகும் என்பது இதற்கு உண்டான அர்த்தம்.
சரி. நம்முடைய பரிகாரத்திற்கு வருவோம். இதேபோல்தான் நாமும் புதையலை புதைத்து வைக்கப் போகின்றோம். ஒரு சிறிய மண் பானையோ அல்லது பித்தளை சொம்பு அல்லது செம்பு சொம்பையோ, எடுத்துக்கொள்ளுங்கள். அதில் 11 ஒரு ரூபாய் நாணயங்களை போட்டு, அந்த சொல்விங் வாயை, மஞ்சள் துணியால் கட்டி, விடுங்கள். 11 ஒரு ரூபாய் நாணயம் பிடிக்கின்ற அளவிற்கு பானையை எடுத்துக் கொண்டால் போதும். இது தான் இப்போது உங்களுடைய புதையல்.(ஏனென்றால், நம் கையில் புதைத்து வைக்கும் அளவிற்கு பொக்கிஷங்களோ, தங்க நாணயங்களோ இல்லை. நம் கையில் இருக்கும் பணம், பன்மடங்கு பெருகினால் போதும்).
உங்கள் வீட்டில் வெளி பக்கத்திலோ, அல்லது பின் பக்கத்திலோ மண் பாங்கான இடம் இருந்தால், அந்த இடத்தில், இந்த சிறிய பானையை புதைத்து வைக்கலாம். அதன்மேல் அருகம்புல்லை, வளர்த்து வரலாம். அப்படி இல்லை என்றால், சிறிய பூந்தொட்டியில் இந்தப் பானையை புதைத்து வைத்து விடுங்கள். அந்த மண்ணில் விநாயகருக்கு உகந்த அருகம்புல் செடியை நட்டு வளர்த்து வாருங்கள்.
தினம்தோறும் கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி, இந்த செடியை வளர்க்க தொடங்குங்கள். அந்த அறுகம்புல்லை தினம்தோறும் விநாயகருக்கு அணிவித்து, உங்கள் வாழ்க்கையில் இருக்கும் தடைகள் நீங்கி, செல்வ வளம் பெருக வேண்டும் என்று வேண்டிக் கொள்ளுங்கள். அந்த அருகம்புல்லுக்கு தண்ணீரை ஊற்றும் போது ‘ஓம் ஸ்ரீம் ஓம்’ என்ற மந்திரத்தை உச்சரிக்க மறவாதீர்.
இந்த பரிகாரத்தை செய்து விட்டால் கோடீஸ்வரர் ஆகிவிட முடியுமா? என்ற விதண்டாவாத கேள்விகளை எழுப்பலாம்! அப்படி இல்லை. நமது கையில் இருக்கும் பணமானது வீண் விரயம் ஆகாமல் நிலைத்து இருக்க வேண்டும். அந்தப் பணம் செடி வளர்ப்பது போல செழிப்பாக வளர்ந்து கொண்டே இருக்க வேண்டும் என்பதற்காகத்தான், இந்த ஒரு ரூபாய் நாணயத்தை நாம் விதைத்து வைத்திருக்கின்றோம்.
செடியானது, வேர் ஊன்றி, பூமாதேவியால் வளர்க்கப்படுவது போல, நம் கையில் இருக்கும் பணமும் செழிப்பாக வளர வேண்டும் என்று பூமாதேவியிடம் ஒப்படைக்கின்றேன். பணம் வீண் விரயம் ஆகாமல், பன்மடங்காகப் பெருக வேண்டும், என்பதற்காக நாம் செய்யக்கூடிய சின்ன தாந்த்ரீக பரிகாரம் தான் இது. உங்களுக்கு நம்பிக்கை இருந்தால், தினம்தோறும் தண்ணீர் ஊற்றி இந்த செடியை வளர்த்து வாருங்கள். நிச்சயம் உங்கள் வாழ்க்கையில் ஏதாவது ஒரு ரூபத்தில் விடிவுகாலம் பிறக்காமல் போய் விடுமா? ஏதாவது ஒரு ரூபத்தில், நல்லது நடக்கும் என்ற ஒரு கருத்தை முன்வைத்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.