ஆடி மாதம் வளர்பிறை துவாதசி நாளில் தொடங்கி கார்த்திகை மாத வளர் பிறை துவாதசி நாள் வரை பெண்கள் விரதம் இருந்து துளசி பூஜை செய்து வந்தால் வீட்டில் சகல பாக்கியங்களும் நிறைந்து காணப்படும்.
துளசி மாடத்தில் உள்ள துளசிக்கு விரதம் இருந்து வழிபாடு செய்யும் போது மகாலட்சுமி சுலோகம் சொல்லி தினந்தோறும் பால், தேன் கலந்து நைவேத்தியம் செய்து கற்பூர ஆரத்தி எடுத்து வழிபட வேண்டும். இதனால் மகாலட்சுமியின் அருளைப் பெறுவதுடன் அம்பிகையின் அருளும் கிட்டும்.