*வளர்பிறை அஷ்டமி விரத பூஜை பலன்கள்*
*அஷ்டமியில் அஷ்ட லட்சுமிகள் தங்கள் செல்வங்களை அதிகப்படுத்தி கொள்ள ராகுகால நேரத்தில் பைரவரை வழிபாடு செய்ததாக சாஸ்திரம் கூறுகிறது. நாமும் ராகுகால நேரத்தில் விரதமிருந்து 11முறை சொர்ணஹர்சன பைரவருக்கு மந்திரத்தை கூறி வழிபாடு செய்தால் அஷ்ட லட்சுமிகளின் அருள் கிட்டும்*
*வளர்பிறை அஷ்டமியில் 108 காசுகள் வைத்து அர்ச்சனை செய்து அந்த காசுகளை தாங்கள் தொழில் புரியும் அலுவலகத்திலோ அல்லது வணிக நிறுவனங்களிலோ வைத்தால் வியாபாரம் பெருகும்*
*வீட்டில் உள்ள பீரோவில் வைத்தால் பணம் சேரும்*
*தொடர்ந்து 8 மாதமும் கோவிலுக்கு வந்து காசு வைத்து பூஜை செய்ய வேண்டும்*
*48 நாட்கள் விரதமிருந்து தினமும் 108 முறை ‘ஸ்ரீசொர்ணஹர்சன பைரவாய நமஹ’* *என்ற மந்திரத்தை மனதில் ஜெபிக்க வேண்டும்*
Tag: