*ஆற்காடு பஞ்சாங்கத்தில் முன்கூட்டியே கணிக்கப்பட்ட கொரோனா வைரஸ்..*
சீனாவில் தொடங்கிய கொரோனா உலகம் முழுவதும் பரவி மக்களை அச்சுறுத்தி வருகிறது. இதனால் தினமும் கொத்து கொத்தாக பலர் பலியாகி வருகின்றனர். இந்த கொரோனா வைரஸ் தாக்கம் குறித்து ஆற்காடு பஞ்சாங்கத்தில் முன் கூட்டியே கணிக்கப்பட்டுள்ளது.
டிசம்பர் மாதம் (மார்கழி) மேற்கு திக்கில் இருந்து புதிய வைரஸ் நோய் பரவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படியே புதிய வைரஸ் நோயான கொரோனா சீனாவில் உருவாகி 100-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி உலகையே நடுங்க வைத்து வருகிறது. இத்தாலி, ஈரானிலும் பெரும் உயிர்சேதத்தை ஏற்படுத்தி வருகிறது.
இந்த கொரோனா வைரஸ் உருவாவதற்கு ஜோதிட ரீதியாக என்ன காரணம் என்று சார்வரி வருஷத்திய ஆற்காடு சீதாராமய்யர் சர்வ முகூர்த்த பஞ்சாங்க ஜோதிடர் சுந்தரராஜன் அய்யர் கூறியதாவது:-
இந்த ஆண்டின் உலக ஜாதகம் விகாரி வருஷம் ராஜா-சனி, மந்திரி-சூரியன் சூரியனுக்கு மகன் சனி இருவருக்கும் பகை. குருவுடன் சனி தனுஷில் இணைந்து பிரம்மத்தி தோஷம் பெற்றதாலும், 7-ம் பார்வையாக புதன் வீட்டை பார்ப்பதாலும் மிதுன ராசியில் புதன் வீட்டில் ராகு பகவான் இருப்பதாலும், இந்த புதிய வைரஸ் நோய் உருவாகியுள்ளது.
மேலும் மகர சங்கராந்தி புருஷர் பெண் கழுதை வாகனத்தில் வந்ததால் விலங்குகளால் புதிய வைரஸ் நோய் உற்பத்தியாகியுள்ளது. இத்தகைய உலக ஜாதக பலன் மாற்றமே புதிய நோய் உருவாவதற்கு ஒரு காரணம்.
அசுர சுக்கிரன் மேற்கில் உதயத்தில் இருப்பதால் மாசி மாதம் கிரக நிலை மாத வாரியாக மாசியில் மீனத்தில் உச்ச பலம் பெற்றிருப்பதாலும் சூரியனும் புதனும் கும்பத்தில் சேர்ந்து இருப்பதாலும் குளிர் பிரதேசமான நாடுகளிலும், மாநிலங்களிலும் இந்த நோய் அதிவேகமாக பரவும்.
சந்திர கிரகணம் இந்த ஆண்டு வடமேற்கு பருவ காலத்தில் பிடிப்பதால் இந்த புதிய வைரஸ் நோயானது வடகிழக்கு திக்கில் உருவாகி மேற்கு திக்கு வழியாக தமிழ்நாட்டிலும் நுழையும். இங்கும் பரவும். ஆனால் பாதிப்பு இருக்காது.
முதலில் பொதுவாக ஒரு நோய் பரவி வருகிறது என்றால் மரம், விலங்குகளை வைத்து நாம் கணித்து கொள்ளலாம். முதலில் வேப்ப மரத்தை நோய் தாக்கும். அதன்பின் அரச மரம், புங்க மரத்தையும் நோய் ஆட்கொள்ளும். அதன் பிறகு விலங்குகளில் நாய்களை தாக்கும். அதன் பின்னர் தான் மனிதனை தாக்கி பரவுகிறது.
வேப்ப மரம் காற்றில் வரும் வைரசை முழுமையாக உள்வாங்கி இழுத்து பூமிக்குள் தள்ளிவிடும். இதனால் நோய் தாக்கம் குறைய வாய்ப்புள்ளது.
நாய்களுக்கு தோல் நோயை உருவாக்கும். இதெல்லாம் வைரஸ் பரவுவதற்கான அறிகுறி.
புதன் கிரகம் மீனத்தில் இடம் பெயர்ந்து நீட்சம் பெற்றதாலும் சூரியன் 14-ந்தேதி முதல் மீனத்தில் பெயர்ச்சி யாவதாலும் நோய் கட்டுக்குள் வரும்.
சுக்ர பகவான் மேஷ ராசிக்கு இடம் பெயர்ந்ததால் இந்த வைரஸ் நோய் தாக்கம் படிப்படியாக குறைய வாய்ப்புள்ளது.
ஏப்ரல் 14-ந்தேதி முதல் சூரிய பகவான் மேஷ ராசிக்கு அதிபதி செவ்வாய் கிரகம் அந்த வீட்டில் சித்திரை 1-ந்தேதி உச்ச பலம் பெற்று வருவதால் 14.4.2020 செவ்வாய்க் கிழமை உச்ச பலத்துடன் ராஜ கிரகத்துடன் வருவதால் அனைத்து விதமான வைரஸ் நோய்களையும் குணமடைய செய்வார். அன்றிலிருந்து நோய் தாக்கம் படிப்படியாக குறைந்து ஜூன் மாதம் முற்றிலும் குணமடைந்து விடும்.
வறட்டு இருமல், சரியான தூக்க மின்மை இந்த கொரோனா வைரசுக்கான முதல் அறிகுறி. கால் உதறல் நோயின் தீவிரத்தை காண்பிக்கும். உடனடியாக ஆஸ்பத்திரிக்கு சென்று மருத்துவரை பார்த்து அவரது ஆலோசனைபடி மருத்துவம் பார்ப்பது நல்லது.
12 நாள் முதல் 18 நாட்களுக்குள் இந்த நோயை குணப்படுத்திட வேண்டும். அதன் பிறகு நோயின் தாக்கம் நீடித்தால் நல்லதல்ல.
மஞ்சள் கலர் பழங்கள் பப்பாளி, ஆரஞ்சு, பைனாப்பிள், வாழைப்பழம் சாப்பிட்டால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து புதிய வகை வைரசில் இருந்து காக்கும்.
1 டம்ளர் வெந்நீரில் ஒரு சிண்டிகை பெருங்காய தூள் போட்டு குடிக்கலாம். 1 டம்ளர் வெந்நீரில் எலுமிச்சை சாறில் உப்பு போட்டு சாப்பிடுவதாலும், கருந்துளசி, சீரகம், மிளகு, சுக்கு கொதிக்க வைத்து வடிகட்டி குடிப்பதாலும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
சித்தா, ஆயுர்வேதம், பாட்டி வைத்திய முறையில் இந்த நோய்க்கு மருந்து உள்ளது. புதிய வகையான வைரஸ் நோய்களில் இருந்து நம்மை பாதுகாத்து கொள்ள வீட்டின் முன்புறமோ அல்லது பின்பக்கத்திலோ துளசிசெடி வளர்க்க வேண்டும். கருந்துளசி வளர்த்தால் மிகவும் நல்லது. எந்த விதமான நோய்களில் இருந்தும் பாதுகாத்து கொள்ளலாம்.