வெளிமாநிலம் மற்றும் சென்னையிலிருந்து வரும் நண்பர்களே!
உங்கள் வீடுகளுக்கு வந்து நுழையும் முன் நீங்கள் கீழ்க்கண்டவற்றை செய்தால் நோய்த்தொற்றை அதன் பரவலைத் தடுக்கலாம்
கண்டிப்பாக வாங்கிக் கொள்ள வேண்டியவை:
லைசால்(Lysol)
Dettol
Bleaching powder.
1 lit capacity Sprayer.
1. Sprayer ல் லைசால் அல்லது டெட்டால் கலந்து உங்கள் வண்டி முழுவதும் அடித்து விடவும்
(டெட்டால்: 2 மூடிக்கு 1 லிட்டர் தண்ணீர். லைசால் : 4 அல்லது 5 மூடி 1 லிட்டர் தண்ணீர்)
2. உங்கள் பாக்கெட்டுகளில் உள்ள அத்தனை பொருட்களையும் அதே ஸ்ப்ரே அடித்து ஒதுக்கி வைத்துவிடவும். பணம் பர்ஸ் ஆகியவற்றில் எல்லாப் பகுதிகளிலும் அடிக்கவும். கொண்டுவந்துள்ள பேக் சூட்கேஸ் என அனைத்தின் மேலும் நன்கு அடிக்கவும்.
3. அரை பக்கெட் தண்ணீரில் அரை பாக்கெட் ப்ளீச்சிங் பவுடரைக் கலந்து கலக்கி அதில் உங்கள் அனைத்து ஆடைகளையும் நன்கு 5 நிமிடங்களாவது ஊறவைத்து எடுத்து அப்படியே கொடியில் போட்டுவிடவும். காய்ந்த பிறகு மீண்டும் துவைத்துக் கொள்ளலாம். மக்ஷீதி நீரைக் கொண்டு உங்கள் காலணிகளைக் கழுவி விடவும்.
இறுதியாக, ஒரு குளியல் அல்லது உங்கள் முகம்/கைகால்களை நன்கு சோப்புப் போட்டு கழுவி வெறும் துண்டுடன் உட்சென்று உரையாற்றிக் கொள்ளுங்கள்.
இது ஒன்றும் கடினமான வேலை அல்ல.
எதிர்ப்பு சக்தி இருந்தாலும் உங்களிடமுள்ள வைரஸ் உங்கள் வீட்டாரை பாதிக்காமல் இருக்க இது மிக அவசியமான செயல் முறை.
“வருமுன்னர்க் காப்பதே சிறந்த செயல்”