தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே பரக்கலக்கோட்டையில் பொது ஆவுடையார் கோவில் உள்ளது. இந்த கோவிலில் பகலில் நடை திறக்கப்படுவதில்லை. ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை அன்று நள்ளிரவு 12 மணிக்கு மட்டும் நடை திறக்கப்படும்.
அப்போதுதான் சிவபெருமானுக்கு பூஜைகள் செய்யப்படுகின்றன. மற்ற நேரத்தில் கதவை வழிபட்டு செல்கின்றனர். வருடத்தில் தைப்பொங்கல் அன்று ஒருநாள் மட்டும் அதிகாலையில் இருந்து மாலை 7 மணி வரை என நாள் முழுவதும் நடை திறக்கப்பட்டிருக்கும்.
அன்றைய தினம் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்வர்.