வராகி அம்மன் மூல மந்திரத்தை உச்சரிப்பதன் மூலம், எதிரிகளின் தொல்லைகளும், எதிர்வினைகள், தீய சக்திகளின் தொல்லைகளிலிருந்து விடுபடலாம்.
நம் வாழ்வில் பல கஷ்டங்கள் நம் செயலால் ஏற்படுகின்றது. நம் வினைகளாலும், நாம் தற்ப்போது செய்து வரும் தவறான செயல்களால் பிரச்னைகளிலும், துன்பங்களிலும் சிக்கித் தவிக்கின்றோம்.
பலர் இதன் மூலம் எதிரிகளால் தொல்லைகளும் அனுபவிக்கும் நிலை இருக்கும். இப்படி எதிரிகளால் தொல்லைகளை அனுபவிப்பவர்கள் வராஹி அம்மனை வழிபடுதல் அவசியம்.
வராகி அம்மனை வழிபடுவோருக்கு மூன்று லோகத்திலும் எதிரிகள் இல்லை. பக்தர்களை காப்பதில் சாந்த ரூபியாக, தாயாக இருக்கும் வராகி அம்மன், அவர்களின் எதிரிகளை அழிக்க ருத்ர அவதாரம் எடுப்பாள்.
தீய வழியில் செல்லும் கணவன் திருந்தி வாழ செய்வது எப்படி?
எதிரிகளின் தொல்லைகளால் கஷ்டத்தை அனுபவிப்பவர்கள் வராகி அம்மனின் மூல மந்திரத்தை தினமும் ஜெபம் செய்து வர அவளின் அருள் கிடைக்கும்.
#மஹா வராஹி மூல மந்திரம்:
ஓம் க்லீம் வராஹ முகி ஹ்ரீம் ஸித்தி ஸ்வரூபிணி
ஸ்ரீம் தன வசங்கரி தனம் வர்ஷய ஸ்வாக
பூஜை முறைகள் :
வராஹி அம்மனை வழிபடுபவர்கள் வெள்ளை மொச்சைப் பருப்பை வேக வைத்து அதனுடன் தேன் மற்றும் நெய்யை கலந்து நைவேத்தியமாக படைத்து வழிபட்டு வர வேண்டும்.
தினமும் வராகி அம்மனை வழிபட்டு வருவதால் எதிரிகளின் தொல்லை நீங்கும், அதோடு தன வசியம் ஆகும், தொழில், வியாபாரம் விருத்தி அடைந்து செழிக்கும்.
வராகி அம்மனை வழிபட பஞ்சமி திதி மிகச்சிறந்ததாகும். பஞ்சமி திதி அன்று வராஹி அம்மனை நினைத்து விரதம் இருந்து வழிபடுவதால் செல்வங்கள் உங்களை தேடிவரும். பிரச்னைகள் விலகும்.