உடல், உள்ளம், மனதுக்குப் பாதுகாப்பு தருகின்ற ஆன்மீக அணிகலன்கள்!
தீய சக்திகள், தீய எண்ணங்கள், தீவினைகளைத் தடுக்கும் அரணாக விளங்குகின்ற ஆன்மீக அணிகலன்கள்!
ருத்ராட்சம், ஸ்படிகம், காசிக் கயிறு, வைரம், நவரத்தினங்கள், பொன், வெள்ளி ஆபரணங்கள் போன்றவை ஆன்மீக சக்திகளைப் பேணுபவை. சுப மங்கள, சுபசகுன சக்திகளை ஈர்த்து நிலை பெறச் செய்து அபரஞ்சித சக்தி, ஸ்வர்ணாங்க்ருத சக்திகளை அளிப்பவை என்பதால் தான் இவற்றை அணிகலன்களாக அணியும் ஆன்மீக வழிமுறைகளை நம் பெரியோர்கள் ஆக்கித் தந்துள்ளனர். ஆனால் மனித சமுதாயமோ இவற்றின் ஆத்ம சக்திகளை உணராது, பேராசையால், இவற்றை வெறும் கௌரம், அந்தஸ்து, செல்வத் தன்மை கொண்டதாக ஆக்கி விட்டார்கள்!
கொள்ளை, ஏமாற்றுதல், வன்முறை, திருட்டு மலிந்து வரும் தற்காலத்தில், பாதுகாப்பு மற்றும் சங்கோஜம், அறியாமை காரணமாக மெட்டிகள், மாங்கல்யம், தோடுகள், மூக்குத்தி, வளையல்கள், கடுக்கன்களை அணிவது மிகவும் குறைந்து விட்டது. எவருக்கும் பயனில்லாது அணிகலன்கள் பெட்டிகளிலும், வங்கி லாக்கர்களிலும் த(தூ)ங்கி விடுகின்றன. மேலும் வறுமை, நடுத்தர வருமானம் காரணமாகப் பலராலும் நவரத்தினங்கள், தங்கம், வெள்ளியின் ஆன்ம சக்திகளையும் பெற இயலாமல் போகின்றது. இதற்காகவே எளியோரும் ஆன்மீக சக்திகளைப் பெறுதல் வேண்டும். எளிதில் அடைய இயலாத மேற்கண்ட “அபரஞ்ஜித சக்தி, ஸ்வர்ணாங்க்ருத சக்தி” மற்றும் வேத, ஹோம, பூஜை, தல, தீர்த்த, யோக சக்திகளை ஜாதி, மத, இன, குல பேதமின்றி யாவரும் பெறும் வண்ணமே காசிக் கயிறு, ருத்ராட்சம், ஸ்படிகம், தாமரை, துளசி மணிகள், ம்ருதுள மணி கங்கண் எனப்படும் மணிக்கட்டு மாலை, மெட்டிகள், பூணூல், ஸ்திர கங்கண், ரட்சா பந்தன், அரைஞாண் கயிறு போன்றவை மிகவும் எளிமையான ஆன்ம அணிகலன்களாக அணியப் பெறுகின்றன! மேலும் இறைவனும் இறைவியுமே ஸ்ரீஸ்வர்ணவல்லி, ஸ்ரீஸ்வர்ணேஸ்வரர் போன்ற திருநாமங்களைத் தாங்கி அருளும் தலங்களில் எளியோரும் முறையாக விரதமிருந்து வழிபட்டிட யாவரும் அவரவர்களுக்குத் தேவையான ஸ்வர்ண சக்திகளைப் பெறுகின்றனர்.
சர்வமங்களம் ஆன்லைன் பூஜாஸ்டோர் –
தெய்வீக மர சிலைகள்,கருங்காலி, கோமதி சக்கரம் ,மாலைகள், சங்கு, ஐம்பொன், வாஸ்து – பூஜை பொருட்கள் கிடைக்கும்.
பொருட்களின் பட்டியல் காண – கீளிக் செய்யவும்
Product catelog –
Shop –
https://Shop.sarvamangalam.info