இன்று பலர் கேட்கும் கேள்வி ஐயா நான் அசைவம் சாப்பிடலாமா, ருத்ராட்சம் அணியலாமா, அசைவம் சாப்பிடலாமா என்ற கேள்விக்கு பின் புலத்திலேயே அவர் அசைவ பிரியர் என்பது நன்றாக தெரிகிறது.. அசைவம் சாப்பிடுவதை விட அதை நினைத்து கொண்டே இருப்பது அதை விட பெரிய பாவம்… வடிவேலுவின் நகைச்சுவை தான் இதற்கு சரியான உதாரணம் புது செருப்பு ஒன்று கோவில் வாசலில் வைத்து விட்டு அதே நினைவுடன் சன்னதியில் சூடத்தை ஒரு நொடி கண்னில் ஒற்றிகொண்டு பார்க்க செருப்பு காணாமல் போகும் நகைச்சுவையாக இருந்தாலும் சிந்தித்து பாருங்கள் அங்கே வேண்டுதலும் சரி ஆசையும் சரி இரண்டுமே நிறைவேறுவது இல்லை.. உங்களுக்கு அசைவம் பிடிக்கும் எனில் சாப்பிடுங்கள் தவறில்லை அசைவத்தையும் ஆன்மிகத்தையும் போட்டு குழப்பிகொள்ளாதிர்.. ஏதோ நீங்கள் பிறந்து அசைவம் புதிதாக சாப்பிட ஆரம்பித்து விட்டது போல நினைத்து வருந்ததேவையில்லை உங்கள் மரபுரிதியாக தொடர்வதே… நீங்கள் ஆன்மிகத்தில் தெய்வ சிந்தனையில் உங்கள் மனம் முழுமையாக செல்ல செல்ல இது போன்ற எண்ணங்களில் பற்று அற்ற நிலை உருவாகும் அது வரை இறுக்கநிலையில் இருந்து விடுபட்டு ஒரு இயல்பான வாழ்க்கையை வாழுங்கள்..
கண்ணப்பர் கதை தெரியாதவர்கள் இருக்க முடியாது அவர் இறைச்சியை இறைவனுக்கு படைத்ததை இன்றளவும் யாரும் பேசுவதில்லை அவர் இறைவன் மீது வைத்த அன்பின் காரணமாக ரத்தம் வழிந்த ஈசனின் கண்களை பார்த்து மனம் பதறி தன் கண்களை எடுத்து இறைவனின் கண்களாக பொருத்தியதை தான் பேசுகிறோம்.. இங்கே அவரது அன்பை என்னவென்று விவரிப்பது அது போல தான் நாம் இறைவன் மீது வைக்கும் அன்பே நம்மை வழிநடத்தும். இன்றும் சிவ ருத்ரனின் அம்சமான காவல்தெய்வங்களுக்கு பலி தருவதை பாரம்பரியமாக செய்து வருகிறோம். சிறு புற்கள் முதல் யானை வரை உயிர் என்பது ஒன்றுதான். . ஆதியும் அந்தமும் இல்லாத இறைவன் ( ருத்ராட்சம்) அவன் மீது நம்பிக்கையும் அன்பும் இருந்தால் போதும் ருத்ராட்சம் அனைத்துக்கும் அப்பாற்பட்டது தீட்டு கட்டுப்பாடுகள் எதுவும் ருத்ராட்சத்திற்கு கிடையாது யார் வேண்டுமானாலும் அணியலாம் உங்கள் மனதையும் வாழ்வையும் வளப்படுத்தும்… தினமும் திருநீறில் மகிழும் ஈசனை நினைத்தும் மஹாலட்சுமியையும் குலதெய்வத்தையும் ஆத்மார்த்தமாக மனதில் நினைத்து கட்டைவிரல் மோதிரவிரலில் படும் படி எடுத்து நெற்றியில் இட அனைத்து இடர்களும் நீங்கி வாழ்வு வளப்படும்.