மனித வாழ்வில் ஒவ்வொரு காலகட்டத்திலும் ஏற்படும் சோர்வு, பிரச்னை, சிக்கலுக்கான தீர்வு தாடிக்கொம்பு சவுந்தரராஜபெருமாள் கோவிலில் உள்ளது. பிறப்பு முதல் இறப்பு வரையிலான பல்வேறு சிரமங்களை தீர்த்து வைக்கும் வழிபாடுகளும், பூஜைகளும் அதிகளவில் மேற்கொள்ளப்படுகின்றன.
அதனால் பிரார்த்தனை தலமாகவும் இது பிரசித்தி பெற்றுள்ளது. வேண்டுதல்கள் நிறைவேறுவதால் வெளி மாவட்ட, மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் ஏராளமானோர் தினமும் வந்து செல்கின்றனர். சவுந்திரராஜ பெருமாள் சில குடும்பங்களுக்கு குலதெய்வமாகவும் மாறியுள்ளார்.