வருடத்தில் இந்த மாதத்தில் மட்டுமே அதிகமாய் பூக்கும்.. இப்படி பூக்கிற பொழுது முடிந்தவரை சேகரித்து வைத்துக் கொள்ளுங்கள்…
பறித்த வேப்பம் பூக்களை ஓரிரு நாள் நிழலில் காயவைத்து உலர்ந்த பிறகு டப்பாவில் நிரப்பிக் கொள்ளலாம்…
இந்த வேப்பம்பூ , ஒரிஜினல் மலைத்தேன் , முருங்கைக்கீரை , நாட்டு மாட்டுப் பால் போல அற்புதம் செய்யும் ஒரு மருந்து என்பது தான் இதன் விஷேஷமே…
வாதம், பித்தம், கபம் என்ற மூன்று நாடி வகையில் ஏதாவது ஒன்று தான் மனிதன்.. என்று ஆயுர்வேதம் சொல்கிறது. அந்த மூன்று நாடிகளையும் சமன்படுத்துகின்ற பேராற்றல் வேப்பம்பூ ஸ்பெஷல்… நாடிகள் சமன் பட்டாலே வியாதிகள் ஓடிப்போகும்தானே…?
பங்குனி சித்திரை மாசத்து அதிசயம்..? அப்படி என்ன சார் அதிசயம்… பொல்லாத அதிசயம் என்கிறீர்களா..? இருக்கு…சார்.. இருக்கு.
வேப்பம் பூ… சாலையோரங்களிலும், கிராமப்புறங்களிலும் இந்த பங்குனி சித்திரை மாதத்தில் பூத்துக் குலுங்கும் வேப்ப மரத்துப் பூக்கள்… அவ்வளமாக பார்வையை கவர்வதில்லை… ஆனால் அந்த வேப்பம்பூவிலிருந்து வெளிக் கிளம்பும் ஒரு வகையான வாசம்… மஞ்சளையும், சாணத்தையும் லேசாக தீயிட்டு கருக்கினால் வருமே.. அது போல ஒரு வாசம்.. அதை நுகராமல் ஒரு வேப்ப மரத்தை தாண்ட முடியாது.. பங்குனி சித்திரை மாதத்தில்…
கேன்சர் கிருமிகளை கொல்வது, குளிர்ச்சி தருவது, குடற்புண்ணை சரி செய்வது , மன நிம்மதி தருகிறது , பல் சுத்தம் , இத்யாதி…என்பதெல்லாம் தாண்டி “சுகரு “க்கு விஷமாய், எதிரியாய் இருக்கிறது வேப்பம்பூ என்பது இன்னொரு ஸ்பெஷாலிட்டி… நீரழிவின் பேரழிவு வேப்பம்பூ..
இது சித்திரை மாதத்திலும் வரும் என்றாலும்… பங்குனியில் ரொம்ப அதிகம் ..
எப்படி சாப்பிட ..? ஈ.ஸி.. அப்படியே முழுங்கலாம் ஒரு கரண்டி … வாரத்துல ஒரு நாள்.. போதும்.. தேவைன்னா ஒரு கரண்டி வெல்லம் அதற்குப் பிறகு… தட்ஸ் ஆல்..
இல்லைன்னா பச்சடி, ரசம் , அவியல்னு ஆயிரம் மெனு “நெட்”டுல இருக்கு.. படிங்க…. எப்படியாச்சும் சாப்பிடுங்க…
நம்ம பெரியவங்க , இதை நாம சாப்பிட வேண்டும் .. நல்ல ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்பதற்காகத்தான்… சித்திரை முதல் நாளன்று வாழைப்பழத்தோடு சாப்பிட வைத்திருக்கிறார்கள்.. மெல்ல மறந்தாயிற்று அதை..
இந்த ஆண்டிலிருந்து பயங்கரமான ஆஸ்பத்திரி செலவை எப்படியாவது மல்லுக்கட்டி குறைக்க ஆசைப்படுகிறவர்கள், விரும்புகிறவர்கள் எல்லாம் பங்குனி சித்திரையில் வேப்பம்பூ பொக்கிஷத்தை சேகரித்து பத்திரப்படுத்துங்க பாஸு….
சொடுக்கு போடற தூரத்துல சுகாதாரம் …என்ன ..? லேசா மெனக்கெடனும்..