சித்ரா பவுர்ணமி நாளில் ஒவ்வொரு ராசிக்காரர்களும் செய்ய வேண்டிய வழிமுறைகள் வருமாறு:
மேஷ ராசிக்காரர்கள் குலதெய்வத்தை வழிபட்டு, ஏழைகளுக்கு சாம்பார் சாதம் தானமாக கொடுக்க வேண்டும்.
ரிஷப ராசிக்காரர்கள் வயது முதிர்ந்த சுமங்கலிப் பெண்களுக்கு, கல்கண்டு சாதம் தானம் செய்து ஆசி பெற தடையில்லாத முன்னேற்றம் ஏற்படும்.
மிதுன ராசிக்காரர்கள் நடராஜர் வழிபாட்டுடன், ஏழை மாணவர்களுக்கு படிப்புக்கு பணம் தானம் அல்லது நோட்டு, புத்தகம் பேனா கொடுப்பது நல்லது.
கடக ராசிக்காரர்கள் சத்திய நாராயணருக்கு விரதம் இருந்து வழிபட்டு, பச்சரிசியால் செய்த உணவை தானம் செய்தால் வறுமை நீங்கி செல்வம் சேரும்.
சிம்ம ராசிக்காரர்கள் சிவ வழிபாடு செய்வதுடன் தந்தை மற்றும் வயது முதிர்ந்த பெரியோர்களின் விருப்பங்களை நிறைவு செய்து நல் ஆசி பெற்றால் கோடி புண்ணியம் தேடி வரும்.
கன்னி ராசிக்காரர்கள் மகா விஷ்ணுவை வழிபட்டு, ஏழை நோயாளிகளுக்கு மருந்து, மாத்திரை வாங்கி கொடுத்தால் நிம்மதியான வாழ்வு கிடைக்கும்.
துலாம் ராசியினர் செந்தாமரை பூவில் அமர்ந்த மகாலட்சுமியை வழிபட்டு ஏழை எளியோர்களுக்கு சர்க்கரைப் பொங்கல் தானம் செய்தால் மன அமைதி ஏற்படும்.
விருச்சிக ராசிக்காரர்கள் முருகனை வழிபட்டு பசு மாட்டுக்கு 9 மஞ்சள் வாழைப்பழம் தானம் தர, வறுமை நீங்கி செல்வம் சேரும்.
தனுசு ராசிக்காரர்கள் லட்சுமி நரசிம்மரை பானகம் படைத்து வழிபட வளர்ச்சி கூடும்.
மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையான உபகரணங்கள் அன்பளிப்பாக தர வேண்டும்.
மகர ராசிக்காரர்கள் சிவன் கோவில் மூல ஸ்தானத்தில் எரியும் விளக்கிற்கு நல்லெண்ணெய் தானம் தர, தடைபட்ட காரியம் கூடி வரும்.
கும்ப ராசிக்காரர்கள் வராகரை வழிபடுவதுடன் ஆதரவற்ற முதியவர்களை பராமரிக்கும் இல்லங்களுக்கு உணவு, உடை தானம் தர, மன நிம்மதி கிட்டும்.
மீன ராசிக்காரர்கள் பைரவர் வழிபாட்டுடன் விவசாயிகளுக்கு தேவையான விதை, உரம் விவசாய தளவாட பொருட்கள் வாங்கி கொடுத்து விவசாயிகளின் வாழ்வா தாரத்தை உயர்த்த, உங்களின் பாவம் நீங்கி கூடுதல் நன்மை உண்டாகும்.